யூடுயூப் மன்னன் சாப்பாட்டு ராமனுக்கு இனி ஜெயிலில் தான் சாப்பாட்டு – காரணம் அவர் வெளியிட்ட இந்த வீடியோ தான்.

0
66903
saapattu
- Advertisement -

யூடியூபில் எத்தனையோ பிரபலமான நபர்கள் இருக்கின்றனர். சாப்பாட்டிற்கு என்று பல்வேறு யூடியூப் சேனல்கள் இருந்தாலும் வண்டி வண்டியாக சாப்பிட்டு அதன் மூலம் பிரபலமானவர் யூடியூப் பிரபலமான சாப்பாட்டு ராமன் என்று அழைக்கப்படும் சித்த மருத்துவர் பொற்செழியன். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகில் உள்ள கிராமத்தில் ஐயப்பன் என்ற பெயரில் சித்தா கிளினிக் நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக இவர் சாப்பாடு ஜீரணமாகும் டானிக் ஒன்றைக் கூட தானே உற்பத்தி செய்து அதனை ஆன்லைன் மூலம் விற்பனையும் செய்து வருகிறார். அதன் மூலம் பல லட்சத்தை சம்பாதித்தார்.

வீடியோவில் 9 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

சமீபத்தில் தான் இவரது யூடியூப் பக்கம் ஒரு மில்லியன் பாலோவர்களை பெற்றிருந்தது. பொதுவாக ஒரு மில்லியன் பாலோவர்களை பெற்றால் அந்த யூடியூபில் நடத்தும் நபர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ போடுவது வழக்கம். ஆனால், அந்த வீடியோ கூட சாப்பாட்டு ராமன் போடவில்லை. அதேபோல கடந்த சில தினங்களாக இவர் எந்த ஒரு சாப்பாட்டு வீடியோவையும் போடவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் ஏன் வீடியோ போடவில்லை என்று விளக்கம் சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : மணிவண்ணனின் மகனா இது? மனைவி மற்றும் அவரது இரண்டு அழிகிய குழந்தைகள். இப்போ எங்க இருக்கார் தெரியுமா ?

- Advertisement -

அந்த வீடியோவில் தற்போது கொரோனாவால்பாதித்து கொண்டிருக்கையில் நான் மட்டும் சாப்பிட்டு கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது அதனால்தான் இத்தனை நாட்களாக வீடியோ போடவில்லை என்று கூறி இருந்தார் சாப்பாட்டு ராமன். ஆனால், இந்த வீடியோ தான் தற்போது இவரை கைது செய்யும் அளவிற்கு வந்துள்ளது இதற்கு முக்கிய காரணமே இந்த வீடியோவில் இவர்கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள சில டிப்ஸ்களை வழங்கியிருந்தார். அது பொதுவான டிப்ஸ் ஆகத்தான் இருந்தது என்றாலும்சித்தா மருத்துவரான இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இவரது சிகிச்சை மையத்திற்கு போலீசார் விசாரணைக்காக சென்றபோது அங்கே இவர் ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பது தெரியவந்தது. மேலும், இவரது சிகிச்சை மையத்தில் சில ஆங்கில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டது. சித்தா படிப்பை முடித்த இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பது சட்டப்படி குற்றம் என்பதால் இவர் போலீசாரால் போலி மருத்துவம் பார்த்த குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

-விளம்பரம்-
Advertisement