கண்ணனே கண்ணே சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை – புதிய என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் நடிகை.

0
6224
kajal
- Advertisement -

சமீபகாலமாகவே சின்னத்திரையில் நடிக்கும் பல நடிகர்கள் காரணம் என்னவென்றே தெரியாமல்
சீரியலில் இருந்து விலகி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்பை கொண்டிருக்கும் கண்ணான கண்ணே தொடரில் இருந்து பிரியா வெளியேறினார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் கண்ணான கண்ணே தொடரும் ஒன்று.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-146-577x1024.jpg

இந்த சீரியல் சமீபத்தில் தான் வெளிவந்தது. இந்த சீரியல் வெளிவந்த சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் கதாநாயகனாக ராகுல் ரவி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாகவே சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரில் நடித்து இருந்தார். பிறகு சாக்லேட் என்ற தொடரிலும் நடித்து இருந்தார்.

- Advertisement -

மேலும், இந்த தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்து வருகிறார். தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் கதையை மையமாகக் கொண்ட கதை தான் கண்ணானே கண்ணே தொடர். இவர்களுடன் இந்த தொடரில் பிரித்திவிராஜ், நித்திய தாஸ், பிரீதி சஞ்சீவ், அக்ஷிதா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

மேலும், இந்த தொடர் 200 எபிசோடுகளை தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியா வெளியேறினார். இந்த நிலையில் இந்த தொடரில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி இணைந்து உள்ளார். எனவே, வெளியேறிய பிரியாவிற்கு பதில் தான் இவர் கமிட் ஆகி இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement