பக்கத்து வீட்டுக்காரரின் கையை கடித்த மதுமிதா.! விடியோவை பகிர்ந்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.!

0
7606
Madhu

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை போய்க்கொண்டு இருந்தது. இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

இதையும் பாருங்க : காதலே இல்லை என்று சொன்ன முகென்.! அபிராமி சென்றதும் செய்த செயலை பாருங்க.!

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மது மீதா வெளியேறியதற்கு ஆண்கள் தான் காரணம் என்று சிலர் கருதிவரும் இந்த நிலையில், மதுமிதாவின் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல். அந்த வீடியோவில் மதுமிதா பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் அவரது கையை கடித்து குதறியதாக தெரியவந்துள்ளது. ஆனால், மதுமிதா அது பொய்யான தகவல் என்றும் மறுத்துள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சில் தனது முன்னாள் காதலரான சாண்டிக்கு தான் ஆதரவு தெரிவித்து வருகிறார். எனவே, ஒரு சிலர் காஜல் பகிர்ந்த இந்த பதிவினை ஆதரித்தாலும் ஒரு சிலர் காஜலை சாண்டிகாக இப்படி மதுவை கேவலப்படுத்த வேண்டாம் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement