இவங்கள இந்த வாரம் அனுபிடிவாங்க.! ஆதரத்துடன் கூறும் முன்னாள் போட்டியாளர் காஜல்.!

0
9791

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் புட்டு புட்டு வைத்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல். அந்த வகையில் தற்போது இந்த வாரம் பாத்திமா தான் வெளியேற போகிறார் என்று அடித்து கூறியுள்ளார் காஜல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாத்திமா, சேரன், கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வார பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு காதல் மலர்ந்ததா.? கடுப்பில் ரசிகர்கள்.! 

- Advertisement -

இந்த நிலையில் இந்த வாரம் பாத்திமா பாபுவை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள் என்று காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கான காரணத்தை கூறியுள்ள காஜல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மீரா தான் கன்டன்ட் எனவே, பாத்திமாவை தான் அனுப்பார்கள் என்று நினைகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ரசிகர் ஒருவர், அவங்களே அனுப்பிவிடுவார்கள் என்றால் நாம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்று கடுப்பில் கேட்க, இது உங்களுக்கு இப்போ தான் தெரியுமா. ஆழமாக யோசித்து டென்ஷன் ஆக வேண்டாம், நிகழ்ச்சியை கண்டு கழித்து ரசியுங்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-16.png

இந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில் பாத்திமா பாபுவிற்கு தான் குறைந்த வாக்குகள் விழுந்துள்ளது. விஜய் டிவி நடத்திய அதிகாரபூர்வ வாக்கெடுப்பில் கூட பாத்திமா பாபுவிற்கு தான் குறைந்த வாக்குகள் விழுந்துள்ளதாக தகவல்கள் நமக்கு கிடைக்கபெற்றுள்ளது. மேலும், நமது behindtalkies இனையதளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் கூட பாத்திமா பாபுவிற்கு தான் குறைந்த வாக்குகள் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement