கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு காதல் மலர்ந்ததா.? கடுப்பில் ரசிகர்கள்.!

0
3942
Losliya
- Advertisement -

பிக் பாஸ் வீட்டினுள் கவின் தான் தற்போது ப்ளே பாயாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் மீது காதல் கொண்டிருப்பதை கவினிடம் நேரடியாகவே கூறி இருந்தார் அபிராமி. ஆனால், கவினோ நாம் இருவரும் நண்பர்களாக பழகி கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அதேபோல அபிராமியிடம் மட்டுமல்ல பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சாக்ஷி, ஷெரின், லாஸ்லியா ஆகிய அனைவரிடமும் கவின் ஜொள்ளு விட்டுக் கொண்டுதான் வருகிறார். அது நிகழ்ச்சி பார்க்கும் அனைவருக்குமே அப்பட்டமாக தெரிகிறது.

-விளம்பரம்-

அதிலும் கடந்த சில நாட்களாகவே கவின் சாட்சியிடம் தான் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். அதே போல லாஸ்லியாவிடமும் ஜொள்ளுவிட்டு திரிந்து வருகிறார். ஆனால், லாஸ்லியவோ கவினை அண்ணன் என்று தான் கூறி வருகிறார்.

இதையும் பாருங்க : ஹீரோ லெவலுக்கு மாறிய சதீஷ்.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் கவின் பாத் ரூமில் சாக்க்ஷி மற்றும் லாஸ்லியாவிடம் பேசி கொண்டிருக்கும் போது என்னை அண்ணா என்றெல்லாம் கூப்பிடாதே, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியதும் லாஸ்லியா, நான் அண்ணா என்று தான் கூப்பிடுவேன் என்று கூறி கவினை வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார்.

அதன் பின்னர் அடுத்த நாள் லாஸ்லியாவிடம் தனியாக பேசிய கவின் ‘சாக்க்ஷி மற்றும் அபிராமி பேசி கொண்டிருக்கும் போது நீ ஏன் என் மேலே கோச்சிக்கிட்டு வந்த என்றார் அதற்கு லாஸ்லியாவோ எனக்கு உன் மேல தான் கோபம் என்றார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் சாக்க்ஷி மற்றும் லாஸ்லியாவிடம் மீண்டும் தனியாக பேசிய கவின், எனக்கு வந்த உடனே உங்கள் ரெண்டு பெயரை (லாஸ்லியாவும் சாக்க்ஷி) பிடிக்கும் என்றதும், லாஸ்லியா கவினிடம் ‘நீ பேசும் விதம் எனக்கு பிடித்திருக்கு உன்னை வெறுப்பேற்ற தான் அண்ணா என்று கூப்பிட்டேன்’ என்றதும் நிம்மதி பெரு மூச்சிவிட்ட கவின் ‘இதுவே போதும் ஒரு வாரம் நான் ஓட்டி விடுவேன்’ என்று கூறினார்.

இதுவரை கவினை பேர் சொல்லி அழைத்து வந்த லாஸ்லியா நேற்றைய நிகழ்ச்சியில் இருந்தே வாடா போடா என்று தான் அழைத்து வருகிறார். அதே போல ஹாலில் அனைவரும் அமர்ந்து கொண்டிருந்த போதும் கவின் பக்கமே அமர்ந்து கொண்டிருந்தார். இதனை வைத்து பார்க்கும் போது கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு மத்தியில் பற்றிக்கொள்ளும் போல தான் தோன்றுகிறது.

Advertisement