பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு காஜல் சொன்ன தண்டனை.

0
1175
kajal
- Advertisement -

மனைவிகளை பாலியல் தொல்லை செய்த குற்றத்திற்காக சிறை சென்றுள்ள சிவசங்கர் பாபா குறித்து நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அடிக்கடி பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-
சிவசங்கர் பாபா ஆன்மிகத்துக்கு தாவியது எப்படி? || Tamil News how did Sivasankar  baba jump into spirituality

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மாணவிகள் பாலியல் சர்ச்சையில் சிக்கிய சிவசங்கர் பாபா குறித்து ட்வீட் செய்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை PSBB பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். PSbb பள்ளி விவாகரத்தை அடுத்து பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் அளிக்கத் துவங்கினர்.

- Advertisement -

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி வருவதாக முன்னாள் மாணவிகள் புகார் அளித்தனர்.இதைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விவாகரத்தில் வெளிநாடு தப்பிக்க இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். சிவசங்கர் பாபாவை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பலர் கூறி வரும் நிலையில் நடிகை காஜல் பசுபதி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, “பாபாவை தூக்கிலிட வேண்டும்” என தெரிவித்திருந்தார். “shame on you twitter” என்பதை பதிவிட்டு, ரேபிஸ்ட் பாபாவை பற்றி ஒரு வீடியோ பதிவிடலாம் என பதிவிட்டேன். ஆனால் அது அப்லோட் ஆகவில்லை என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement