முன்னாள் கணவர் சாண்டி எடுத்த புகைப்படம். நன்றி தெரிவித்து காஜல் பதிவிட்ட பதிவு. குவியும் லைக்ஸ்.

0
78703
kajal-sandy
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய பின்னர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் புட்டு புட்டு வைத்து வருகிறார், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல் பசுபதி. அதிலும் இவர் இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே சாண்டிக்கு ஆதரவாக பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார்.

-விளம்பரம்-
Kajal

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை  கொரியாகிராஃப் செய்யும் அளவிற்கு வளர்த்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார் சாண்டி. மாஸ்டர் சாண்டி நடிகை காஜலுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக காஜலை பிரிந்தார் சாண்டி. அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் அவரை திருமணமும் செய்து கொண்டார்.

- Advertisement -

அதே போல சாண்டிக்கும் காஜலுக்கு திருமணத்திற்கு பின்னர் இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் சமீபத்தில் ஊடகத்தில் செய்திகள் பரவியது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் காஜலிடம் கேட்டுள்ள போது, எனக்கு எந்த குழந்தையும் இல்லை, அதை நான் தவறவிட்டு விட்டேன். இதை பற்றி நான் பல முறை அவரிடம் சொனேன். தற்போது வரை அதை நினைத்து நான் வருத்தப்பட்டு வருகிறேன்.

ஏற்கனவே, சாண்டி தன்னை விட்டு பிரிந்ததற்கான காரணத்தை கூறிய காஜல், என்னுடைய பிரேக் அப் பெரிய கதை, நம்ம லவ் டார்ச்சர் தான். வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா என்று பதில் கூறியுள்ளார். மேலும், எப்போதும் நான் அவருக்கு ஒரு நல்ல தோழி மட்டும் தான் என்றும் கூறியிருந்தார். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக சாண்டியின் குடும்பத்தினரை சந்தித்த காஜல் அப்போது எடுத்துக்கொண்ட புகைபடத்தை கூட தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் சாண்டி.

-விளம்பரம்-

மேலும், சாண்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சாண்டியின் மகள் வீடியோ கால் மூலம் சாண்டியிடம் பேசினார். அப்போது சாண்டி மிகவும் கண்கலங்கி அழுதார். அந்த விடியோவை பகிர்ந்த காஜல், சாண்டியின் மகளை பார்த்து தானும் கண் கலங்கி அழுததாக கூறி இருந்தார். இதனால் கடுப்பான சாண்டியின் ரசிகர்கள், இனியும் சாண்டியை பற்றி எதையும் பதிவை செய்யாதீர்கள் அவரை அவரது குடும்பத்துடன் வாழ விடுங்கள் என்று கூறினார்கள். இதனால் இனி சாண்டியை பற்றி எதுவும் பதிவிட மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றிற்கு காஜல் சென்றுள்ளார். இந்த விழாவில் சாண்டி மற்றும் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், கமலுடன் காஜல் புகைப்படம் ஒன்றை காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்த சாண்டிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் காஜல். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement