10 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய கமலஹாசன்.! இது என்ன பிக் பாஸ் ஆண்டவருக்கு நேர்ந்த சோதனை.!

0
3330
kamal
- Advertisement -

தென்னிந்திய திரை உலகத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் ‘உலகநாயகன் கமலஹாசன்’. இவர் சினிமா துறையில் பல சாதனைகளும், விருதுகளையும் பெற்று உள்ளார். இதனைத்தொடர்ந்து இவர் சில வருடங்களாவே தமிழில் வெற்றிகரமாக நடை பெற்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தமிழ் திரையுலக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் கமலஹாசன் மீது புகார் அளித்துள்ளார். ஞானவேல் ராஜா அவர்கள் அந்த புகாரில் கூறியது, கமல்ஹாசன் அவர்கள் தன்னிடம் 10 கோடி ரூபாய் பணத்தை வாங்கினார் என்றும்,மேலும், அந்த பணத்தை நான்கு வருடங்களுக்கு மேலாகியும் திருப்பித் தரவில்லை என்றும் புகார் அளித்துள்ளார்கள்.

-விளம்பரம்-
kamal

அதற்கு கமலஹாசன் அவர்கள் எனக்கும் அவருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.இதுதொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் கமலஹாசன் மீது புகார் அளித்துள்ளார். அது கடந்த 2014 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்தது உத்தம வில்லன் படம். இந்த படம் வெளியாவதில் அதாவது திரையுலகத்திற்கு வருவதற்கு முன் சில பிரச்சனைகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டன.

இதையும் பாருங்க : கவின் குறித்து மறைமுக பதிவை போட்ட அபிராமி .! ரசிகர்கள் கடுப்பானதால் பின்னர் செய்த காரியத்தை பாருங்க.!

- Advertisement -

இதனால் கமலஹாசன் அவர்கள் என்னை அணுகி உங்களது தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன் என்று கூறினார்.மேலும்,என்னிடம் முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்று வாங்கிக் கொண்டார் என்று தெரிவித்திருந்தார் .உத்தமவில்லன் படம் வெளிவந்து நான்கு வருடங்கள் ஆகியும் இதுவரை கமலஹாசன் அவர்கள் என்னுடைய படத்தில் நடிக்க முன்வரவில்லை என்று கூறினார். மேலும், 10 கோடி ரூபாய் பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று ஞானவேல்ராஜா புகாரில் கூறியுள்ளார்.

Image result for producer gnanavel raja

இந்த புகார் குறித்து கமலஹாசன் அவர்கள் விளக்கம் தருமாறு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு கமலஹாசன் அவர்கள் கூறியது, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது தவிர ஞானவேல் ராஜாவிடம் எந்த ஒரு உத்தரவாதமும் பணமும் நான் வாங்கவில்லை என்று கூறினார். இதனால் சமூக வலைத்தளங்களில் ஞானவேல் ராஜா- கமலஹாசன் சம்பந்தமான சர்ச்சைகள் வைரலாக பரவி வருகின்றன.

-விளம்பரம்-
Advertisement