கவின் குறித்து மறைமுக பதிவை போட்ட அபிராமி .! ரசிகர்கள் கடுப்பானதால் பின்னர் செய்த காரியத்தை பாருங்க.!

0
6004
abirami-kavin
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளாகவே மக்களிடையே அதிக ஆதரவையும், அன்பையும் பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.தமிழில் வரும் இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே மக்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே போட்டியாளர்கள் இடையே நட்பும், அதைத் தாண்டி புனிதமான உறவும் , பல சண்டைகள் பிரச்சினைகள் வந்ததை என்பதை யாராலும் மறக்கமுடியாத ஒன்று. அதிலும் அபிராமிக்கும்,முகினுக்கும் இடையே இருந்த நட்பு.மேலும்,அது அதையும் தாண்டி ஒரு புனிதமான உணர்வு. ஆனால் அதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறி வந்தார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த வரிசையில் சாக்ஷி ,கவின், லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதலும், நட்பும் பிக்பாஸ் குழுவையே கடுப்பேத்தும் அளவிற்கு போய்க்கொண்டிருந்தது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளேயும் ,வெளியேயும் அதிகளவு சர்ச்சைகள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல், முகின் மற்றும் அபிராமி இடையிலான நட்பும் கூட அப்பப்ப ஹைலைட்டாக இருந்தது.இந்த வரிசையில் தற்போது செரின் மற்றும் தர்ஷினின் நட்பு உள்ளது. இந்த பிக் பாஸ் வீட்டில் முகின் உடன் ஷெரின்,லாஸ்லியா அவர்கள் நன்றாக பேசுவார்கள். ஆனால் அபிராமிக்கு இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஏனென்றால் அபிராமி முகினிடம் அந்த அளவிற்கு நெருக்கமாக பழகி வந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சேரனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.! வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் .!

மேலும், சில வாரங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டில் இருந்து அபிராமி அவர்கள் வெளியேற்றப்பட்டார். அபிராமி அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த போட்டியாளர்களை சந்தித்து வந்துள்ளார்.மேலும், ஒவ்வொருவரையும் சந்தித்து அவர்களுடன் நிறைய விஷயங்களை பகிர்ந்தும்,அவர்களுடன் புகைப்படங்களை எடுத்தும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது அபிராமி அவர்கள் பச்சை மற்றும் பிங்க் வண்ணங்களில் ஆடை அணிந்து ஒரு டிரடிஷனல் போல போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. மேலும், இந்த புகைப்படத்தில் அபிராமி அவர்கள் “கண்கள் நிலம் நோக்கி உன் வருகைக்காக என் காத்திருப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இதனால் நெட்டிசன்கள் யாருக்காக? எதற்காக? என பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அபிராமி அவர்கள் இது ஒரு சும்மா வார்த்தைகள் தானே தவிர , யாரையும் குறித்து குறிப்பிடவில்லை என கூறியிருந்தார் . மேலும், இன்று கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறியதால் அவரை குறிப்பிட்டு தான் அபிராமி இப்படி ஒரு பதிவை பதிவிட்டதாக நெட்டிசன்கள் கமன்ட் செய்ய அந்த பதிவையே நீக்கியுள்ளார் அபிராமி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement