விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
பிக் பாஸ் என்றாலே வாரம் ஒரு பஞ்சாயத்து வரும். அந்த வகையில் இந்த வாரம் நிக்சன் – அர்ச்சனா விஷயம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா மற்றும் நிக்ஸன் ஆகிய இருவருக்கும் சில வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது. அப்போது நிக்சன், அர்ச்சனா வாடி போடி, கருமம், மூஞ்ச பாரு என்று படு கேவலமாக பேசி இருந்தார். மேலும், இனி வினுஷா பத்தி பேசுனா சொருகிடுவேன் என்றும் பேசி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் கமல், நிக்சனை கண்டித்ததோடு அவருக்கு எல்லோ கார்ட்டையும் கொடுத்தார். ஆனால், ஆட்டிகிட்டு, தொளலத் போன்ற வார்த்தைகளை பேசிய தினேஷை கடுமையாக விமர்சித்தார் கமல். அதிலும் நார்த் மெட்ராஸில் இப்படி தான் பேசுவார்கள் என்று சொல்ல நீங்கள் யாரு என்றெல்லாம் கேட்டு இருந்தார். மேலும், என்ன அவர் எந்த ஏரியா என்பது முக்கியமல்ல, ஒரு ஏரியாவை பொறுத்து ஒருவரை Brand செய்யாதீர்கள்.
இனி அப்படி பேசாதீங்க நிக்சன், இல்லை என்றால் உங்களை இப்படி தான் Brand செய்வார்கள் என்று நிக்ஸ்னுக்கு ஆதரவாக பேசி இருந்தார். அதே போல பூர்ணிமாவை ஆட்டிகிட்டு பொறுமையா வாங்க என்று தினேஷ் சொன்னதற்கு மன்னிப்பும் கேட்க வைத்தார். பூர்ணிமாவை, தினேஷ் ‘ஆட்டிகிட்டு வரீங்க’ என்று சொன்ன வார்த்தையை பெரிய கெட்ட வார்த்தை போல தினேஷை வெளுத்து வாங்கிய கமல், தினேஷை பூர்ணிமாவிடம் மன்னிப்பும் கேட்க வைத்தார்.
ஆனால், இதே வார்த்தையை பூர்ணிமா பேசியது குறித்து கமல் இதுவரை எதுவும் கேட்கவில்லை. மேலும், இதை விட மோசமாக பேசிய பூர்ணிமாவை கமல் இந்த அளவிற்கு கண்டித்தும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாது இந்த நிகழ்ச்சி ஆரம்பம் ஆன முதலே மாயா மற்றும் பூர்ணிமா தொடர்ந்து பல கெட்ட வார்த்தைகளை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கேட்டு வருகின்றனர்.
குறிப்பாக லூசு குயில், candle oil, குடிகார அங்கில், தா என்ற வார்த்தை என்று பல வார்த்தைகளை பேசி இருக்கிறார் பூர்ணிமா. ஆனால், இதையெல்லாம் கமல் ஏன் கேட்கவில்லை என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் பல முறை மைக்கை மறைத்து பேசி இருக்கின்றனர். அதை கூட கமல் பெரிதாக கண்டித்து இல்லை. ஆனால், நேற்று தினேஷ் பேசியதை மட்டும் அடுத்த முறை எல்லோ கார்ட் கொடுப்படும் என்ற அளவு வரை கமல் பேசியது பார்ப்பரசமாகவே தெரிகிறது.