விரைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை இருந்து வருகிறது. தமிழை போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழைப் போல தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் நான்காவது சீசன் எட்டி இருக்கிறது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதியே துவங்கிவிட்டது. ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இந்த நிகழ்ச்சி மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியது.
இதிலுள்ள போட்டியாளர்கள் அனைவருமே தனிப்பட்ட முறையில் யாரிடமும் பாசம் காட்டாமல் டாஸ்க் என்று வந்துவிட்டால் போட்டியாளர்களாக மட்டுமே பார்க்கின்றார்கள். அதேபோல டாஸ்க் என்று வந்துவிட்டால் நட்பு, பாசம் இதை பற்றி எல்லாம் பார்க்காமல் அடித்து வெளுத்து வருகிறார்கள். சொல்லப்போனால் இந்த சீசனில் தமிழ் பிக் பாஸ்ஸை விட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.
தெலுங்கு பிக் பாஸின் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கியிருந்தார். அதன் பின்னர் நானி இரண்டாவது சீசனில் தொகுத்து வழங்கி இருந்தார். மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி இருந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நான்காவது சீஸனிலும் நாகார்ஜுனாவின் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நாகார்ஜுனாவின் மருமகளும் நடிகையுமான சமந்தா கூட இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று கமல் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்ஜுனா கமலை அகம் டிவி வழியாக சந்தித்து இருக்கிறார்.
உலக நாயகன் கமல் இன்று தனது 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுபோக இன்று ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலின் பிறந்தநாள் கொண்டாட்டம் தான் அதிகம் இடம்பெற இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், கமல் பிறந்த நாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் மோஷன் பிக்சர் கூட வெளியாகி இருக்கிறது.