நேற்றய நிகழ்ச்சியில் சிம்புவை பங்கமாக கலாய்த்த கமல்.! செம குசும்பு தான.!

0
3730
kamal

பிக்பாஸ் நிகழ்ச்சி படுமும்முரமாக சென்று கொண்டிருக்கிறது இதுவரை பாத்திமாபாபு வனிதா மோகன் வைத்யா மீரா மிதுன் வெளியேறியிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார் நேற்றைய நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான டாஸ்குகள் நடைபெற்றது.

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு சினிமா கதாபாத்திரமாக நடித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மீண்டும் தங்களது கதாபாத்திரமாக மாறி கமலிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். அதில் இந்த வாரம் சிம்பு கதாபாத்திரத்தில் நடித்த சாண்டி கமலிடம் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.

- Advertisement -

அதில், சாண்டி கமலிடம் வாழ்க்கையில யார் முதலில் செல்கிறார்கள் என்பது முக்கியமில்லை ஆனால் அரசியல் யார் முதலில் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம் இந்த வசனத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு கமல் மிகவும் அற்புதமான வசனம் தான். ஆனால், எந்த ஆங்கிளில் இருந்து பார்க்கிறோம் என்பது இருக்கிறது என்றதும் அரங்கமே சிறுத்துவிட்டது.

-விளம்பரம்-

தொடர்ந்து பேசிய கமல் உங்களுக்கு சிறுவயது முதலே அங்கிள் பற்றியெல்லாம் நன்றாக தெரியும் இங்கே இருந்து பார்த்தால் கடைசியில் வருவதாக தெரியும் .இந்த பாக்கம் இருந்து பார்த்தால் அது தான் ஃபர்ஸ்ட். ஆனால், அந்தப் பக்கம் இருந்து பார்த்தால் தோல்வியின் பக்கம் ஓடுவது போல தான் தெரியும் என்றார் கமல். பின்னர் இறுதியாக சாண்டி மருதநாயகம் படம் எப்போது வரும் என்று கேட்டிருந்தார் அதற்கு இப்போதைக்கு அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறியிருந்தார்.

Advertisement