கஸ்தூரி பதிவிட்ட புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம். அப்படி என்னனு பாருங்க.

0
349478
kasturi
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார். 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் என்றால் அது கஸ்தூரி தான். கஸ்தூரிக்கு தற்போது 44 வயது நிலையிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார்.

-விளம்பரம்-

அதே போல தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு பிரச்னையிலும் சிக்கி விடுகிறார். இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை கஸ்தூரி, சிவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ படத்தில் குத்து விளக்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் பல்வேறு பட வாய்ப்புகள் கஸ்தூரிக்கு வந்த வண்ணம் இருந்தது.

இதையும் பாருங்க : முன்னாள் கணவர் சாண்டி எடுத்த புகைப்படம். நன்றி தெரிவித்து காஜல் பதிவிட்ட பதிவு. குவியும் லைக்ஸ்.

- Advertisement -

தற்போது விஜய் ஆன்டனியுடன் ‘தமிழரசன்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி சர்ச்சையான பதிவுகளை போட்டு வருகிறார். கடந்த சில மாதத்திற்கு முன்னர் குழந்தையுடன் அரை நிர்வாண போஸ் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

ட்விட்டரில் பல்வேறு சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வந்த கஸ்தூரி தன்னை யாராவது கலாய்த்தால் அவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து விடுவார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி கண்டிப்பாக ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ட்விட்டரில் நல்ல பாம்பாக படம் எடுத்த கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரால் எந்த ஒரு சுவாரசியமும் ஏற்படவில்லை. இதனால் நாமினேஷனில் வந்த முதல் வாரத்திலேயே கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கஸ்தூரி வழக்கம்போல தனது ட்விட்டர் பக்கத்தில் பல சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று விதிமீறல் செய்ததாக நீக்கப்பட்டுள்ளதாக கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்படி என்ன புகைப்படத்தை பதிவிட்டார் என்று பார்த்தால், வேறொன்றுமில்லை எடிட் செய்யப்பட்ட தனது புகைப்படம் ஒன்றை தான் கஸ்தூரி பதிவிட்டு இருந்தார். ஆனால், அவர் பதிவிட்ட அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் விதிகளுக்கு அப்பாற்பட்டு இருந்ததால் அந்த புகைப்படத்தை நீக்கியதாக இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆனால், அப்படி என்ன இந்த புகைப்படத்தில் இருக்கிறது என்பது தெரியவில்லை என்று நடிகை கஸ்தூரி புலம்பியுள்ளார். மேலும், கடந்த சில காலத்திற்கு முன்பாக நான் பதிவிட்ட வீடியோ ஒன்றை விட்டாராம் நீக்கி இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி. அதே போல இந்த பதிவை கலாய்ப்பவர்கள் உடனடியாக பிளாக் செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement