ஒரு கேமராக்கே ஊரே அலருச்சி, இங்க 100 கேமரா. பிக் பாஸ்சுக்கு செல்லும் சுசித்ராவை கேலி செய்த கஸ்தூரி. சுசித்ரா கொடுத்த பதிலடி.

0
15530
suchithra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் மூன்றாவது வாரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது இதுவரை ரேகா மட்டும் வெளியேறி இருக்கும் நிலை இந்நிலையில் கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா உள்ளே நுழைந்தார். பொதுவாக வைல்ட் கார்ட் போட்டியாளர் உள்ளே நுழைந்த பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடிக்கும். ஆனால் அர்ச்சனா வைல்ட் கார்ட் போட்டியாளரராக உள்ளே நுழைந்த பின்னர் அப்படி எதுவும் பெரிய சம்பவம் நடக்கவில்லை.

-விளம்பரம்-
Suchitra: I feel a deep sense of responsibility and profound shame: Suchitra  | Tamil Movie News - Times of India

அதேபோல பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த ஒரு சில நாட்களிலேயே இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர்கள் நுழைந்து விடுவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் யார் இரண்டாவது வைல்டுக் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா இந்த சீசனில் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

பின்னணி பாடகியான சுசித்ரா தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடி இருக்கிறார் ஆனால் இவர் மிகப்பெரிய பிரபலமடைந்தது என்னவோ சுச்சிலீக்ஸ் மூலம்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கும் எண்ணற்ற பிரபலங்களின் ஆபாச படங்களை பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் சுசித்ரா. ஆனால் இது குறித்து விளக்கமளித்த அவர் தன்னுடைய ஆக்கவுண்ட் யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்றும் தான் எந்த பிரபலங்களில் ஆபாச புகைப்படங்களை வெளியிட இல்லை என்றும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார் சுசித்ரா.

இப்படி ஒரு நிலையில் சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் கஸ்தூரி ட்வீட் செய்திருக்கிறார்.இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, Suchileaks புகழ் சுசித்ரா போறாங்களாம். ஒரு கேமரா contentக்கே ஊரே அலறிச்சு… இங்கே 100 கேமெரா ! போட்டியாளர்கள் எல்லாம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா சமூக இடைவெளியை கடிபிடியுங்க என்று பதிவிட்டு BiggBoss4Tamil #wildcard #RJSuchitra #MeeraMitun2point0 என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

கஸ்தூரியின் இந்த பதிவிற்கு பதில் அளித்து சுஜித்ரா ‘நான் பிக்பாஸில் நுழைவதற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட அனைத்து தாக்குதல்களுக்கும் என்னால் முடிந்தவரை பதிலளிப்பேன் ‘ என்று பதிவிட்டுள்ளார். இதில் இருந்தே சுசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement