இதில் என் மகன் யார் என்று கண்டுபிடிங்க – தன் ரீல் மற்றும் ரியல் மகனுடன் கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்.

0
517
Kasthuri
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு சின்னவர், அமைதிப்படை, செந்தமிழ்பாட்டு, இந்தியன் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

பின் இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை கஸ்தூரி, சிவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ படத்தில் குத்து விளக்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் பல்வேறு பட வாய்ப்புகள் கஸ்தூரிக்கு வந்த வண்ணம் இருந்தது. பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி:

ஆனால், ட்விட்டரில் அவர் பேசிய பேச்சுக்கும் பிக்பாஸில் இவர் இருந்ததற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாத போலத்தான் இருந்தது. டுவிட்டரில் எல்லோரையும் வறுத்து எடுத்த கஸ்தூரி பிக் பாஸ் வீட்டில் புள்ள பூச்சியாக இருந்தார். அதிலும் இவருக்கும், வனிதாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் இவரால் வனிதாவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும், இவருக்கு பிக்பாஸில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் சீக்கிரமாகவே வெளியேற்றப்பட்டார்.

சோசியல் மீடியாவில் கஸ்தூரி:

இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டுமில்லாமல் சமூக பிரச்சினைகள் குறித்து எப்போதும் தைரியமாக பதிவிட்டு வருவார். அதோடு இவர் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று யாரையும் பார்க்காமல் தவறு என்றால் ட்விட்டரில் தட்டிக் கேட்டு உள்ளார். அதே போல ட்விட்டரில் தன்னை விமர்சிப்பவர்களை அப்படியே பதிலடி கொடுத்து விடுவார்.

-விளம்பரம்-

கஸ்தூரியின் மகள் புகைப்படம்:

இருந்தாலும் நடிகை கஸ்தூரி பெரும்பாலும் தனது குடும்பத்தினர் புகைப்படங்களை பதிவிடுவது இல்லை. நடிகை கஸ்தூரிக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். நீண்ட வருடங்களுக்கு பிறகு தான் கஸ்தூரி தன் மகள் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் கூட இவரின் மகள் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன் முடியை தானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக கஸ்தூரி பதிவிட்ட மகனின் புகைப்படம்:

இந்நிலையில் முதன்முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை கஸ்தூரி இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து இருக்கிறார். அதில் கஸ்தூரி உடன் 2 மகன்கள் இருக்கிறார்கள். இதில் 1 ரியல் இன்னொன்று ரீல். இதில் யார் என்னுடைய உண்மையான மகன் என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இப்படி இவருடைய பதிவுக்கு பலரும் பதிலளித்தும், கமெண்ட் போட்டும் வருகிறார்கள். உங்களுக்கு கஸ்தூரி மகன் யார் என்று தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்கள்.

Advertisement