அஜித் எவ்ளோ கொடுத்தார் கரெக்ட்டா சொல்லுங்க – கேள்வி கேட்ட கஸ்தூரி. (அவங்களுக்கு இதான் சந்தேகமாம்)

0
1181
kasthuri

தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்த கஸ்தூரி, தற்போது ஒரு சில படங்களில் அயிட்டம் பாடலுக்கு நடனமாடி மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சையான சில பதிவுகளை பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் ட்விட்டரில் ஒரு பணிப்போரே ஏற்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் மீண்டும் அஜித் பற்றி ட்வீட் போட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் ஊரடங்கு கடிபிடிக்கப்ட்டு வருகிறது. . இது ஒருபுறம் இருக்க, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையும் பாருங்க : எங்க போச்சி உங்க நேர்மை ? MNM-த்தில் இருந்து விலகிய பத்மபிரியா பற்றி சனம் ஷெட்டி போட்ட ட்வீட்.

- Advertisement -

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது,உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள். மக்கள் அளிக்கும் நிதி கொரோனா தடுப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். திடீர் அவசர செலவினங்களுக்காக தாராளமாக நிதியுதவி வழங்குங்கள்.நிதியுதவி செய்பவர்களின் விவரங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா முதலமைச்சரை சந்தித்து 1 கோடி ரூபாய் நிதி வழங்கி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித், தற்போது ரூ.25 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கி உள்ளார்.

முதலில் அவர் 2.5 கோடி வழங்கியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அஜித் 25 லட்சம் கொடுத்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் அஜித் நிதி வழங்கியது குறித்து ட்வீட் செய்துள்ள கஸ்தூரி, சுரேஷ் சந்திரா அவர்களே தயவு செய்து அஜித் எவ்வளவு நன்கொடை வழங்கினார் என்ற சரியான இடத்தை கொடுக்க முடியுமா அவர் இரண்டரை கோடி கொடுத்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது அவர் கொடுத்தது 25 லட்சமாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு அது நல்ல உதவி தான் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement