அவரது மகள் குறித்து என்னிடம் இதை தான் கேட்டார் தோனி – வைரலாகும் கஸ்தூரியின் வீடியோ.

0
714
kasthuri

கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தான் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல் என்ற பட்டப் பெயருடன் திகழ்ந்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்தியவர்.

ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்த நிலையில் தற்போது அணைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார். தோனியின் இந்த திடீர் அறிவிப்பு அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.இதனால் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் #ThankyouMsd என்ற ஹேஷ் டேக்கை கூட ட்ரெண்ட் செய்தனர்.

- Advertisement -

தோனியை போலவே நேற்று சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இருப்பினும் தோனியின் ஒய்வு அறிவிப்பு தான் பலராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் துவங்கி சினிமா நடிகர்கள் வரை பலரும் தோனி மற்றும் ரைனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கஸ்தூரி, தோனி குறித்து பேசியுள்ளார்.

அதில், இந்த வீடீயோவை கண்ட பலரும் உண்மையில் கஸ்தூரி, தோனியை சந்தித்தாரா என்று கேள்வி எழுப்பினர். ஆனால், உண்மையில் நடிகை கஸ்தூரி, கடந்த 2018 ஆம் ஆண்டு தல தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து அவரிடம் பேசியுள்ளார்.மேலும், அவருடன் தன்னை ஒப்பிட்டு தான் இவ்வளவு குள்ளமாக இருப்பதாக கூறும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் அப்போது பதிவிட்டு இருந்தார் கஸ்தூரி.

-விளம்பரம்-
Advertisement