இதெல்லாம் கவனிச்சலே தெரியும் – பிக் பாஸ்ல கொடுத்த Clue புரியும். புட்டு புட்டு வைத்த கஸ்தூரி.

0
89248
archana

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஆரம்பத்தில் அனிதா மற்றும் சுரேஷ் பிரச்சனையை மட்டும் அரைத்து கொண்டு இருந்த பிக் பாஸ் தற்போது தான் போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் நாரதர் வேலையை துவங்கி இருக்கிறார். அதுவும் Eviction Free Pass டாஸ்க்கின் போது சுரேஷ், போட்டியாளர்களை பற்றி பேசியதை அப்படியே அகம் டிவியில் போட்டு காண்பித்து சிண்டு முடிந்துவிட்டார். இதனால் சுரேஷுக்கு மற்ற சில போட்டியாளர்களுக்கு கொஞ்சம் வாக்கு வாதம் துவங்கியது.

archana

இப்படி ஒரு சமயத்தில் vj அர்ச்சனாவை பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக அனுப்பியுள்ளார் பிக் பாஸ். அர்ச்சனா, பிக் பாஸின் முதல் நாளே கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்ததால் பிக் பாஸில் கலந்துகொள்ள சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது எப்படியோ அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டு இருக்கிறார்.அர்ச்சனாவை பற்றி சொல்லவா வேண்டும். இவரை பார்த்ததும் போட்டியாளர்கள் அனைவரும் குஷியில் ஆழ்ந்தனர்.

- Advertisement -

அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் நுழைந்த உடனேயே போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருந்தனர். அதே போல அர்ச்சனா உள்ளே சென்றதும் அர்ச்சனாவிற்கு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் போட்டியாளர்கள் அனைவர்க்கும் பட்டப்பெயரை கொடுத்தார் அர்ச்சனா. இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா குறித்து பிக் பாஸின் முன்னாள் போட்டியாளரான கஸ்தூரி கூறியுள்ளார்.

அதில், அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தபோது தீமை தான் வெல்லும் பாட்டை போட்டார்கள். அதிலிருந்து இவர் ஆட்டத்தை கலைத்த ஆடப் போகிறார் என்ற clue கிடைத்துவிட்டது. அர்ச்சனா சண்டையே போட மாட்டார்கள் ஆனால் ஆதிக்கம் நிறைய செலுத்துவார்கள். மற்றவர்களை சண்டை போட வைப்பார்கள். விஜய் டிவி பொருத்தவரை சண்டை போடுவார்கள் என்று உள்ளே அனுப்பிய சனம் ஷெட்டி அமைதியாகி விட்டார்கள். இந்த சீசனில் நிறைய வைல்டு கார்ட் போட்டியாளர்கள் உள்ளே செல்வார்கள். அதேபோல முதல் வாரத்தில் கண்டிப்பாக ஒரு பெண்தான் வெளியேறுவார் அதனால் தான் அர்ச்சனாவை அனுப்பி உள்ளனர் என்று கஸ்தூரி.

-விளம்பரம்-
Advertisement