விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பிரச்சனை இல்லாமல் இருந்தது இல்லை. அதிலும் காண்ட்ராக்ட், சம்பள விவகாரம் என்று பல்வேறு பிரச்சனைகள் கடந்த ஆண்டு நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை கஸ்தூரி, தனக்கு இன்னமும் சம்பள பாக்கி இருக்கிறது என்று ட்வீட் போட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான கஸ்தூரி தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு சர்ச்சையான பதிவுகள் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பேசப்பட்டார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் கடந்த ஆண்டு ஒளிபரண பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், ட்விட்டரில் இவர் ஏற்படுத்திய பாரபரப்பை பிக் பாஸில் ஏற்படுத்த முடியவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர் தொடர்ந்து ட்வீட் செய்துவந்தார். அதிலும் சமீபத்தில் வனிதாவின் திருமண விஷயத்தில் தலையிட்டு கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி ஒரு நிலையில் தனக்கு பிக் பாஸில் தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் வரவில்லை என்று ட்வீட் போட்டுள்ளார். அதில் ‘என்னுடைய சம்பளத்தை தராமல் இருக்கும் விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே manumission குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான். உங்களின் பொய்யான வாக்குறுதிகளை நான் நம்பவில்லை. ஆனால், இதை நான் எதிர்பார்க்கவும் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கஸ்தூரி ட்விட்டர் பக்கத்திலும், அதன் பின்னர் ஆரமித்த யூடுயூப் சேனலிலும் பிக் பாஸ் குறித்து போட்ட பதிவுகள் தான் காரணம் என்றும் சிலர் சொல்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பள பிரச்சனை புதிதான விஷயம் அல்ல ஏற்கனவே மீரா மிதுன், சரவணனன், மதுமிதா போன்ற போட்டியாளர்களுக்கு சம்பள விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய சரவணன், 100 நாள் காத்திருந்த பின்னர் தான் சம்பளத்தை கேட்டேன். ஆனால், அப்போது கூட ஒரு சில நாட்கள் அலைய விட்டார்கள். ஜிஎஸ்டி, அதுஇது என்றெல்லாம் காரணத்தை சொல்லி கடைசியாக ஒரு வழியாக வாங்கிவிட்டேன்.