வருத்தப்படாத வைல்டு கார்டு சங்கம் – சுசித்ராவிற்கு ஆதரவாக முன்னாள் பிக் பாஸ் நடிகை போட்ட ட்வீட்.

0
1422
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 50வது நாளான நேற்று (நவம்பர் 22) சுசித்ரா வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது.

-விளம்பரம்-

ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.

- Advertisement -

எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள். இப்படி ஒரு நிலையில் சுசித்ரா குறித்து நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், தானை தலைவி சுசித்ரா வுக்கு நன்றி நன்றி நன்றி, இப்படிக்கு கஸ்தூரி, நிறுவனர், வருத்தப்படாத வைல்டு கார்டு சங்கம் என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ட்விட்டர் வாசி ஒருவர், உங்களை போன்று அவர்களும் பிக் பாஸ் வாய்ப்பை வீணாக்கி வெற்றி பெறாமல் திரும்பி விட்டார்கள் என்று கேலி செய்தார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, பல கோடி ரசிகர்களின் இதயத்தை பெற்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ? வனிதா மற்றும் பாலாஜி விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஹரிஷ் கல்யாண் படங்களில் நடித்து வருகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் மறக்கப்பட்டுவிட்டனர் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement