ஊளை விடுறதை தட்டி கொடுக்கிறீங்க.. வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியை கண்டு கடுப்பான கஸ்தூரி..

0
6150
kasturi

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 வேற லெவல் கூட சொல்லலாம்.மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தான் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நம்ம உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான். மேலும், பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாகவும், தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியும் விளையாடி வந்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சி பிரச்சனைகளும், கலவரங்களும் காதல்களும் கொண்ட கலவை நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பிக்பாஸ் பட்டத்தையும் கொடுப்பார்கள்.ஆனால், கமல்ஹாசன் எதிர்பாராததை எதிர் பார்க்கலாம் என்று கூறியது போலவே நடந்துவிட்டது. இப்போ இந்த பிக் பாஸ் சீசன் 3ன் வெற்றியாளர் முகென் தான். இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்துள்ளார்கள்.

- Advertisement -

இது மட்டும் இல்லைங்க பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது பாய்ஸ் குரூப்பு தாங்க. ஏன்னா, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது “வி ஆர் தி பாய்சு ஊ ஊ ஊ “என்ற பாடல் மூலம் பிரபலமானவர்கள் தான் இந்த பாய்ஸ் அணி. இந்த பாடல் வெறித்தனமாக தெரிக்கவிட்டது கூட சொல்லலாம். அதிலும் தற்போது விஜய் டிவி பாய்ஸ் அணியை மட்டும் வர வைத்து கொண்டாடி வருகிறார்கள். எப்போதுமே விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைத்து போட்டியாளர்களையும் வர வைத்து தான் ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம் என ரகளையாக இருக்கும். ஆனால்,விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து “வி ஆர் தி பாய்சு ” அணியை மட்டும் வரவழைத்தது. இதில் சாண்டி, தர்ஷன்,முகென்,கவின் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இது ரொம்ப விஷமத்தன்மையான விஷயம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும்,”வி ஆர் தி பாய்சு ஊ ஊ” என்ற பாடல் மூலம் தான் இந்த அணியை உருவாக்கினார்கள். இந்த அணி எப்படி உருவாச்சுன்னு ? பார்த்தோம்னா… பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ஒரு முறை நடிகை மதுமிதா அவர்கள் ஒரு சண்டையில் ஆண்கள் எல்லாம் பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது ரொம்ப மோசமான விஷயமாக இருக்கிறது. பெண்கள் எல்லாம் அடிமையாக இருக்கிறார்கள் என்று ரொம்ப தாறுமாறாக பேசினாங்க. இதனால் மனமுடைந்து போய் சாண்டி, கவின் எழுதியது தான் “வி ஆர் தி பாய்சு ஊ ஊ ஊ “என்ற பாடல்.மேலும்,ஆண் என்ன? பெண் என்ன? எல்லாம் ஓரினம் தான் என்று சொல்லிட்டு ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்கள். இப்போ உலகம் முழுவதும் இந்த பாடல் பிரபலமாகபட்டது. ஆரம்பத்தில் நகைச்சுவையாக எழுதிய பாடல் இப்ப மாஸ் காட்டுது.

-விளம்பரம்-

தற்போது விஜய் டிவி பாய்ஸ் அணியை மட்டும் வரவழைத்து கொண்டாடியது ரொம்ப கஷ்டமா இருக்கு என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் கஸ்தூரி “வி ஆர் தி பாய்சு” நிகழ்ச்சியை ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அதில், இது மிகவும் கேவலமாக இருக்கிறது. விஜய் தொலைக்காட்சி தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை புரமோட் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், அதுவும் ஆண்களின் விஷமத்தனத்தை புரமோட் செய்வது போலதான் இருந்தது. நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே இளைஞர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலையும் டேக் செய்துள்ளார் கஸ்தூரி.

கஸ்தூரி இந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள மதுமிதாவின் கணவர் மோசஸ் , , ஆணென்ன? பெண்ணென்ன? எல்லாம் ஓரினம் தான். இதுவும் பாடல் தான். விஷத்தை தேன் கலந்து சாப்பிட வைக்கிறீர்கள்… சுவையாக இருப்பதால் நாமும் சாப்பிடுகிறோம். வி ஆர் தி பாய்ஸ் ஒரு தவறான விஷயம் என்று டேக் போட்டுள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சி ஆண்களின் ஆதிக்கத்தை ஊளையிட்டு கொண்டு இருக்கிறார்கள் என்றும், இதற்கு விஜய் டிவி உடந்தையாக இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல்,பாய்ஸ் அணியின் போட்டியாளர்கள் வீட்டில் இருந்த வனிதா, கஸ்தூரி, சாக்ஷி,மதுமிதா, ஷெரின் என எல்லா பெண்களையும் கிண்டலும் கேலியும் செய்து பேசி வந்து உள்ளார்கள்.

மேலும், இவர்கள் ஆண்கள் தான் கெத்து என பெருமை கொண்டாடும் வகையில் அவர்களுடைய செயல் இருந்தது என கூறிவருகின்றனர். இதை விஜய் டிவி பாய்ஸ் அணியின் விஷம்ம தன்மையை அறியாமல் அவர்களுக்கு பாராட்டியும்,வாழ்த்தியும் வருகின்றது.ரசிகர்கள் ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் பெண்களுக்கு கொடுப்பதில்லை எனவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரிய செயல் என்றும் கூறுகிறார்கள்.

Advertisement