பிரபல சீரியலின் இரண்டாம் பாகத்தில் கவின் மற்றும் லாஸ்லியா.. ரசிகர்கள் குஷி..

0
14036
Kavin-Losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே அதிக ஆதரவையும், அன்பையும் பெற்று வந்தது. மேலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த இரண்டு சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வேற லெவல் கூட சொல்லலாம்.ஏன்னா அந்த அளவிற்கு கலவரங்கள் ,காதல், சண்டைகள் என களை கட்டியது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பல பிரபலமானதற்கு முக்கியமான காரணம் என்று பார்த்தால் அது கவின்,லாஸ்லியா காதல் தான். இவர்கள் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தாலும் பிறகு நாட்கள் செல்ல செல்ல இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். மேலும், இவர்கள் காதல் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. எப்பவுமே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே அதை பற்றி அப்படியே விட்டு விடுவார்கள்.ஆனால், தற்போது முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பற்றி மட்டும் இன்று வரையும் மக்களிடையே ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-
Image result for kavin losliya serial

அந்த அளவிற்கு பிரபலம் ஆனது கவின், லாஸ்லியா காதல்தான்.அதுமட்டுமில்லைங்க “கவிலியா” என்ற ஹாஸ்டேக் ஒன்றை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி ரசிகர்கள் கவின், லாஸ்லியா குறித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.இப்போது கூட இதுதான் ட்ரெண்டிங் நியூஸ் ஆக இருக்கிறது. மேலும் இவர்களுடைய காதல் தற்போது வரை காதல் காவியமாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். தற்போது இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஜோடியாக சீரியலில் நடிக்க உள்ளார்கள் என்ற தகவல் வெளிவந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். அது என்னவென்றால், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் இன் இரண்டாம் பாகம் வரப்போவதாகவும், இந்த சீரியலில் நம்ம கவின், லாஸ்லியா சேர்ந்து நடிக்கப் போகிறார்கள் என்ற பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

இதையும் பாருங்க : பிகிலை முடுக்க ஷாருக்கான் ட்ரைலரை லைக் செய்யும் அஜித் ரசிகர்கள்.. காரணம் இது தான்.!

- Advertisement -

மேலும், இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் வந்திருந்தனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த சீரியல் குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும், இதில் கவின், லாஸ்லியா இவர்கள் இந்த வாய்ப்பினை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது சினிமா பட வாய்ப்புக்காக காத்திருப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது மட்டும் இல்லைங்க லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ஊடகங்களிடம் என் பெற்றோர்கள் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறியிருந்தார். அதேபோல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தோம் கூடிய சீக்கிரம் எங்கள் திருமண தேதியை அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

Image result for kavin losliya

இந்த நிலையில் நாங்கள் இருவரும் விரைவில் ஜோடியாக வாழப்போகிறோம். அது மட்டும் இல்லைங்க பெற்றோர்கள் சம்பாதிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றது. அவர்கள் சம்மதத்துடன் தான் நாங்கள் கல்யாணம் செய்து கொள்வோம் என்று உறுதியாக லாஸ்லியா தெரிவித்து உள்ளார். எல்லாருமே எதிர்பார்த்திருந்தது லாஸ்லியா,கவின் திருமணம் தான். இவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பல ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்

-விளம்பரம்-
Advertisement