இளையதளபதி விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டிரைலர் தான் தற்போது யூடியூபை தெறிக்கவிட்டு வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திகழ்ந்து வரும் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் மற்றும் அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள பிகில் படத்தில் நடிகர் அப்பா மற்றும் மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடித்திருக்கிறார். இவர்களை தவிர படத்தில் விவேக், யோகி பாபு, கதிர், இந்துஜா, ஆனந்த் ராஜ், ஜாக்கி ஷராப் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் அதாவது, வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பல மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால், படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. எதிர்பார்த்ததைப் போல இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டி விட்டுள்ளார். அதிலும் அப்பா கதாபாத்திரத்தில் வரும் ராயப்பன் விஜய் ட்ரைலரில் மிரட்டி இருந்தார். ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இந்த ட்ரெய்லர் வெளியான வெறும் மூன்று மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு பெரும் சாதனையை செய்திருந்தது. இதோடு மட்டுமில்லாமல் யூடுயூபில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
இதையும் பாருங்க : முதன் முறையாக தனது அக்காவின் குடும்பத்தாருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..
இந்த நிலையில் பிரபல யூடியூப் நபர் நிறுவனம் பிகில் திரைப்படங்களை பாராட்டும் வகையில் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளது. அதில் பிகில் டிரைலரில் இடம் பெற்ற சில புகைப்படங்களை பகிர்ந்து விஜய், ஆர் ரகுமான், அட்லி இணைந்தால் வெறித்தனத்தை உச்சத்தை காணலாம் என்று பிகில் திரைப்படத்தின் ட்ரைலரின் லிங்கையும் பதிவிட்டு உள்ளது. இது பிகில் படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் கிடைத்த மாபெரும் ஒரு கௌரவமாக பார்க்கப்படுகிறது. யூடியூபின் இந்த பதிவினை கண்ட இயக்குனர் அட்லி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் 2 மில்லியன் பார்வைலர்களால் லைக் செய்யப்பட்டு இந்தியாவில் இதுவரை அதிகம் லைக் செய்யப்பட்ட ட்ரைலராக சாதனை படைத்தது. இதற்கு முன்பாக ஷாருக்கானின் ஸிரோ திரைப்படம் தான் 1.9 மில்லியன் லைக் பெற்று அதிக லைக் செய்யப்பட்ட ட்ரைலர் என்ற சாதனையை செய்திருந்தது. தற்போது வரை பிகில் டீசர் 30 மில்லியன் பார்வைகளால் பார்க்கப்பட்டு மாபெரும் சாதனையை செய்துள்ளது.ஆனால், பிகில் திரைபடத்தின் ட்ரைலர் 2 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற ஒரு சில மணி நேரத்தில் ஷாருக்கானின் ஸிரோ ட்ரைலரும் 2 மில்லியன் லைக்ஸ்களை பெற்றது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கடுப்பில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், பிகில் படத்தின் ட்ரைலர் சாதனையை தடுக்கும் விதமாக அஜித் ரசிகர்கள் வேண்டுமென்றே ஸிரோ ட்ரைலரை லைக் செய்து வருவதாக சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஷாருக்கானின் ஸிரோ ட்ரைலர் கடந்தஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாகி இருந்தது. ஆனால், பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ஒரு சில நாட்கள் மட்டும் தான் ஆகியுள்ளது. ஆனால், அதற்குள்ளாகவே கடந்த ஒரு வருடமாக ஷாருக் கான் செய்து படத்தின் ட்ரைலர் சாதனையை தும்சம் செய்துள்ளது. இருப்பினும் பிகில் ட்ரைலர் இந்தியாவில் அதிகம் லைக் செய்யட்ட ட்ரைலர் என்ற சாதனையைசெய்ய விடாமல் இருக்க வேண்டுமென்றே ஸிரோ திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் தற்போது லைக் செய்து வருவதாக விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.