இதற்காக தான் கவின் தர்ஷனை சப்போர்ட் செய்கிறான்.! கவின் நண்பர் அளித்த பேட்டி.!

0
9657
kavin-tharshan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையானடாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்கு தான் அமோக ஆதரவு இருந்துவருகிறது. இதுவரை கவின் பலமுறை நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார். இவர் நாமினேஷனில் வந்தபோதெல்லாம் அதிகமான வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்துவந்தார். கடந்த வாரம் கூட கவின் நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். பல்வேறு இணையதளங்களில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவில் கூட கவினுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்துவந்தன.

இதையும் பாருங்க : சமந்தா புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி.! இருப்பினும் ஸ்ரீரெட்டிக்கு குவியும் ஆதரவு.!

- Advertisement -

கவின் இத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் அவர் நேர்த்தியான கேமை விளையாடுகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். ஒருவேளை கவின் இந்த சீசனின் வின்னராக வந்தால் அவன் கண்டிப்பாக மாறிவிடுவான். ஒவ்வொரு வார இறுதியிலும் ரசிகர்கள் கொடுக்கும் கை தட்டலை வைத்து அவன் யாருக்கு சப்போர்ட் செய்ய வேண்டுமென்பது தீர்மானிக்கிறார். அந்தவகையில் தர்ஷனுக்கு அதிகப்படியான சப்போர்ட் இருக்கிறது என்பதை தெரிந்து தான் தன்னுடைய வெற்றியைக் கூட அவனுக்கு அர்ப்பணித்து விடுவேன் என்று அவன் கூறியிருந்தார். இதுவரை அவன் பிக் பாஸ் வீட்டில் இருப்பதே சிம்பதி ஓட்டை வைத்து தான் என்று கூறியுள்ளார் ராஜு.

கவின் குறித்து மேலும் பேசிய ராஜு தற்போது உள்ள போட்டியாளர்கள் யாரும் பிக்பாஸ் மதிப்பதே இல்லை. பிக்பாஸ் வீட்டில் நீங்கள் காதல் செய்யவா உள்ளே செல்கிறார்கள். அப்படி இருக்க எதற்கு அவ்வாறு செய்ய லாஸ்லியாவை வற்புறுத்துகிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது அவர் தமிழ் சினிமாவில் ஒரு கீர்த்தி சுரேஷை போல வருவார்.

-விளம்பரம்-
Image

இந்த நிகழ்ச்சி மலேசியா ஸ்ரீலங்கா என்று பல்வேறு நாடுகளில் உள்ள மக்களால் பார்க்கப்படுகிறது எனவே ,உங்களுக்கான அதிகாரத்தை இந்த நிகழ்ச்சியின் மூலம் எப்படி பெறுவது என்பது அவரவர் விருப்பம். ஆனால், இந்த விளையாட்டை கவின் பொறுப்பாக விளையாடவில்லை. எப்போதும் அவனைப் பற்றியே யோசிக்கும் ஒரு நபராக தான் விளையாடி வருகிறார். அவன் வேறொரு நண்பருக்காக தனது நண்பரை கூட விட்டுக் கொடுத்து விடுவார் என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement