பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கவின். இவர் ஆர்.ஜேவாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். பின்னர் சிறு சிறு ஷார்ட் பிலிம்களில் நடித்தார். பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதற்கு பிறகு பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் மூலம் தான் இவருக்கு சினிமாவில் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும், இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.
ஆனால், சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் கவினுக்கு எக்கச்சக்க பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போது இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ஆர்மிக்கல் கூட உருவானது. மேலும், அடிக்கடி ட்விட்டரில் கவின் சம்மந்தப்பட்ட பல டேக்குகள் அடிக்கடி ட்ரெண்டிங்கில் வந்தது. அதே போல இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை ஒரு காதல் மன்னனாக திகழ்ந்து வந்தார்.
ஆரம்பத்தில் அபிராமி, சாக்ஷி என்று ரொமான்ஸ் செய்து வந்த கவின், பின்னர் லாஸ்லியாவுடன் காதலில் விழுந்தார். ஆனால், இருவருமே தாங்கள் காதலிப்பதாக எந்த இடத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை. கவின், பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை லாஸ்லியாவிடம் எதுவாக இருந்தாலும் வெளியில் போய் பேசிக்கலாம் என்று தான் கூறி வந்தார். ஆனால், வெளியில் வந்ததும் இவர்கள் இருவரும் பேசிக்கொள்ள கூடவில்லை.
அவ்வளவு ஏன் சமீபத்தில் லாஸ்லியாவின் தந்தை இறந்ததற்கு கூட கவின் எந்த ஒரு வருத்தத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் என்று ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. ஒரு ஸ்டைலிஸ்டை காதலிப்பதாகவும் அவருடன் தான் கவின் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவு உண்மை என்று தான் தெரியவில்லை.