ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கும் கவின்.!

0
50300
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். அதுபோக வனிதா வெளி வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த வாரம் தலைவராக நியமனம் செய்து அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டு விட்டார் பிக் பாஸ்.

-விளம்பரம்-

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின், முகென் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். மேலும், இந்த வாரம் வனிதா தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்யமுடியவில்லை. அதே போல அவருக்கு ஒரு சிறப்பு பவரும் கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால், அது என்ன பவர் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஒரு வேலை அது என்ன என்பது இன்று தெரிய வரலாம். தற்போது கிடைத்த தகவலின்படி இந்த வார ஓட்டிங்கில் கவினுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறதாம். மேலும், ஷெரின் தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று வருகிறாராம்.

நமது Behindtalkies இணையத்தளத்தில் நடந்து வரும் ஓட்டிங்கிலும் சரி, மற்ற சில தனியார் இணையத்தளத்தில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கிலும் சரி,கவின் தான் அதிகப்படியான வாக்குகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். இதன் மூலமே கவினுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-2.png

இந்த வாரம் எலிமினேஷன் மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வனிதா நாமினேஷன் இடம் பெற்று இருந்தால் அவர் கண்டிப்பாக வெளியேறி இருப்பா.ர் ஆனால், இம்முறை யார் வெளியேற போகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நமது கணிப்பின்படி இந்த வாரம் ஷெரின் மற்றும் லாஸ்லியா இருவரில் யாராவது வெளியே போக வாய்ப்பு இருக்கிறது.

Advertisement