அந்த கேரக்டர் கவின் பண்ணா நல்லா இருக்கும்னு அவர் கிட்ட சொன்னேன் அவரும் ஓகே சொன்னார், ஆனா – கவின் ப்ளூ ஸ்டார் இயக்குனர் சொன்ன விஷயம்.

0
460
- Advertisement -

ப்ளூ ஸ்டார் படத்தில் அசோக் செல்வன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகருந்த நடிகர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி உட்பட பல நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

ப்ளூ ஸ்டார் படம்:

ஊர் தெரு மற்றும் காலனி தெரு ஊர் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியும் அதனால் ஏற்படும் பிரச்சனை குறித்து தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் இயக்குனர்கள், நடிகர்கள் என பட குழுவினர் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் வாய்ப்பை கவின் நழுவ விட்டிருக்கும் தகவல்கள் தான் வெளியாகி இருக்கிறது.

கவின் பட வாய்ப்பை நழுவ விட காரணம்:

அதாவது, இந்த படத்தில் முதன்முதலாக கவின் தான் நடிக்க இருந்தது. படத்தினுடைய கதையை கேட்டதுமே கவினுக்கு பிடித்துப் போய்விட்டது. ஆனால், மற்ற படங்களில் கவின் பிசியாக நடித்திருந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் கவின் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் கமிட் ஆகி இருந்தார். இதை சமீபத்தில் ப்ளூ ஸ்டார் படத்தின் இயக்குனர் ஜெயக்குமாரே பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

கவின் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கவின். இவர் முதலில் சின்னத்திரை சீரியல்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நட்புன்னா என்னன்னு தெரியுமா,லிப்ட் போன்ற படத்தில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

கவின் நடிக்கும் படங்கள்:

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியாகி இருந்த டாடா படத்தில் கவின் உடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றிருந்தது. தற்போது கவின் ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தவிர டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் படத்தில் கவின் கமிட் ஆகியிருக்கிறார். அந்த படத்திற்கு அனிரூத் தான் இசையமைக்கிறார். அது இது மட்டும் இல்லாமல் நெல்சன் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்திலும் கவின் கமிட் ஆகி இருக்கிறார்.

Advertisement