ஒரு வழியாக வெளியானது கவின் படத்தின் அப்டேட். அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்.

0
14883
kavin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. சொல்லப்போனால் இந்த சீசனுக்கு முன்னாள் ஒளிபரப்பான இரண்டு சீசன்களை விட இந்த சீசன் தான் மிகவும் ஹிட் அடைந்தது. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் அந்த வகையில் கவினும் ஒருவர். கவின் அவர்கள் படிக்கும் போதே ஆர்.ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார். சினிமா துறையில் மீது இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் உதவியால் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மேலும், நடிப்பைக் கற்றுக் கொள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொண்டார்.

-விளம்பரம்-

இவர் நடித்த குறும்படங்களின் மூலமாக தான் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. மேலும், 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” கனா காணும் காலங்கள்” என்ற சீரியல் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு பின் பிரபலமான சீரியல் ஆன சரவணன் மீனாட்சி சீரியலில் ‘வேட்டையன்’ என்கிற சரவண பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பையுயும், அன்பையும் பெற்றார். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு 2015 ஆம் ஆண்டு ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : குட்டி கத பாடலில் வந்த கார் இது தான். இதை தான் படத்திலும் விஜய் பயன்டுத்தியுள்ளாரா ? புகைப்படம் இதோ.

அதுமட்டும் இல்லாமல் இன்று நேற்று நாளை, முடிசூடா மன்னன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் கவின் நடித்து உள்ளார். பின் தான் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுடைய வாழ்க்கையே மாறியது என்று சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவினுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் படை, ரசிகர்கள் மன்றம் என ஆரம்பித்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினுக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை தனது பட வாய்ப்புகள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கவின் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஒரு சிறிய குளுவை மட்டும் கொடுத்து இருந்தார் இயக்குனர் வினித் பிரசாத் என்பவர். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் கவின் நடித்து வரும் படத்தின் பாடல்களுக்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என்றும் குறிப்பிட்டு அதில் #தமிழ்மூவி #கோலிவுட் #கவின் என்ற ஹேஷ் டேகையும் பயன்படுத்தி இருக்கிறார். இதனை கண்டகவின் ரசிகர்கள் பலரும் படத்தின் வேறு ஏதாவது அப்டேட்டை கொடுக்குமாறு கமெண்ட்களை அள்ளி வீசி வருகிறார்கள்.


Advertisement