குட்டி கத பாடலில் வந்த கார் இது தான். இதை தான் படத்திலும் விஜய் பயன்டுத்தியுள்ளாரா ? புகைப்படம் இதோ.

0
6702
master
- Advertisement -

பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி, கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும், தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது.

-விளம்பரம்-

கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ஒரு குட்டி கத என்ற தலைப்பில் வெளியான இந்த பாடலை விஜய் பாடி இருந்தார். பொதுவாக நம்ம விஜய் அவர்கள் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் குட்டி கதைகளை சொல்வது வழக்கம். ஆனால், தற்போது அதே வரிகளில் பாடல் அமைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்த பாடலை கனா படத்தின் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் தான் எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

- Advertisement -

இதையும் பாருங்க : எனக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது – இளையராஜாவை தொடர்ந்து ரீ-மேக் விஷயத்தில் கடுப்பான ஏ ஆர் ரஹ்மான்.

மேலும், இந்த குட்டி கதை பாடல் தான் `மாஸ்டர்’ படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பாடலின் படப்பிடிப்பு ஷிமோகா சிறையில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனினில் இந்த படத்தில் விஜய் ஒரு ஜெயில் பாதுகாவலராக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. வழக்கம் போல் தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியிருக்கிறார். அனிருத் இசையில் ஏற்கனவே விஜய் செல்ஃபீ புள்ள பாடலை பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த குட்டி கதை பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த குட்டி கதை பாடல் வீடியோவை வடிவமைத்தவர் லோகேஷ் கனகராஜ் இடம் துணை இயக்குனராக இருந்த லோகி என்பவர் தான்.

-விளம்பரம்-

மேலும், இந்த குட்டி கதை பாடல் முழுக்க விஜய்யின் கார்ட்டூன் இடம்பெற்றது அதில் ஒரு காட்சியில் விஜய் ஒரு காருடன் இருக்கும் காட்சியும் இடம்பெற்றது. மேலும், அந்த காரை தான் விஜய் மாஸ்டர் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தற்ப்போது, 1984-ம் ஆண்டு சந்தைக்கு வந்த மாருதி சுசூகியின் இந்த கார் தான் விஜய் இப்படத்தில் பயன்படுத்தும் கார் என்றுகூறப்படுகிறது. இதோ அந்த புகைப்படம், ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பதை படம் வெளியான பின்னர் தான் தெரியவரும்.

Advertisement