கவின் மற்றும் லாஸ்லியா காதல் என்ன தான் ஆச்சி. கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கவின்.

By Rajkumar · 31/1/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த இரண்டு சீசன்களை விட மாஸ் காட்டியது. அதோடு இந்த பிக் பாஸ் 3ல் நடந்த சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் பூகம்பமே கிளம்பியது. அதிலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது 'கவின், லாஸ்லியா' காதல் தான். முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாகத் தான் இருந்தார்கள். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் காதல் மலர்ந்தது.

மேலும்,இதுவரை வந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளிலேயே கவின்,லாஸ்லியா காதல் வேற லெவல். தற்போது கூட இவர்கள் இருவரும் 'காதல் காவியங்கள்' என ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும்,ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே "கவிலியா" என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இவர்கள் சம்பந்தமான புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள்.

இதையும் பாருங்க : விஜய் படம்னாலும் 2 வாரம் தான். என்ன ஜீவா இதெல்லாம் இப்போதான் பிகில் 100 நாள் கொண்டாடிச்சி.

மேலும், இவர்கள் திருமணம் பற்றி கவின், லாஸ்லியா யோசிப்பதை விட இவர்களுடைய ரசிகர்கள் தான் அதிகம் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா என்பதை இதுவரை ஓபனாக கூறியது கிடையாது. இந்த நிலையில் சமீபத்தில் கவினுக்கு 2019 ஆம் ஆண்டின் Most Desirable Men On Television என்ற பட்டியலில் முதல் இடம் கிடைத்தது. அந்த வலைத்தளத்திற்கு கவின் பேட்டி அளித்துள்ளபேட்டியில் , நீங்கள் சிங்கிளா இல்லை கமிட்டடா என்று கேள்வி கேட்கப் பட்டதற்கு சிங்கிள் என்று ஒரே வார்த்தையில் பதில் கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/B79-sbdBPoC/

இதையும் பாருங்க : 2019 -ன் விரும்பத்தக்க நபர்கள். சின்னத்திரை பிரபலங்களை பின்னுக்குத்தள்ளி டாப் 4ல் இடம் பிடித்த 3 பிக் பாஸ் பிரபலங்கள்

இதன்மூலம் கவின் லாஸ்யாவை காதலிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. மேலும், அந்த பேட்டியில் உங்களுக்கு திருமணத்தில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, கண்டிப்பாக எனக்கு தெரியவில்லை. கல்யாணம் என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. எனக்கு தெரிந்து ஒரு சில தம்பதிகள் திருமணம் முடித்து பல வருடங்கள் சந்தோஷமாக இருந்து வருகிறார்கள். ஆனால், ஒரு சிலரோ ஆறே மாதத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். திருமணம் என்பது முக்கியம் இல்லை அதில் இருக்கும் அன்பு தான் முக்கியம் என்று கூறியுள்ளார் கவின்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full