விஜய் படம்னாலும் 2 வாரம் தான். என்ன ஜீவா இதெல்லாம் இப்போதான் பிகில் 100 நாள் கொண்டாடிச்சி.

0
6279
vijay-jeeva

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜீவா. இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் மகன்என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தான் நடிகர் ஜீவா சினிமா உலகிற்கு அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, ரௌத்திரம், நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது நடிகர் ஜீவா அவர்கள் 83 என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் ஜீவா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தொகுப்பாளினி சமீப காலமாகவே உங்களுடைய படங்கள் எல்லாம் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கிற மாதிரி எங்களுக்கு தோணுது. அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்டார்.

Image result for jeeva 83 movie"
83 படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக நடிக்கும் ஜீவா

அதற்கு ஜீவா அவர்கள் கூறியது, ஒவ்வொரு வருஷமும் பாத்தீங்கன்னா ஒரு படம் ரிலீசாகும். ஆனால்,இப்போது ஒரு வருஷத்துக்கு 200 படம் ரிலீஸ் ஆகுது. முன்னல்லாம் படம் 100 நாட்கள் ஓடும். ஏன்னா, அந்த அளவிற்கு தியேட்டர்கள் பிரீயாக இருக்கும். ஆனா, இப்பல்லாம் படம் ஒரு வாரம், இரண்டு வாரம் மட்டும் தான் ஓடுகிறது. சொல்லப்போனால் தளபதி விஜய் அவர்களின் படமும் 2 வாரம் தான் தியேட்டரிலில் ஓடும். அந்த அளவிற்கு படங்கள் ரிலீஸ் ஆகுகிறது. ஒரு வருடத்திற்கு 200 படங்களுக்கு மேல் ரீலிஸ் ஆனால் தியேட்டர் எப்படி கிடைக்கும். இதனை தப்புன்னு சொல்ல வில்லை. இந்த மாதிரி நம்ப வளர்ந்திருக்கும் காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி தான் படம் வெளியிட முடியும்.

- Advertisement -

இப்ப எல்லாம் படம் வெளியாகவேண்டும் என்றால் எந்த வெள்ளிக்கிழமை என்று யோசிக்கிற நிலைமை வந்து விட்டது. நான் மட்டும் இல்ல இப்ப இருக்கிற காலத்திற்கு ஏற்றவாறு படம் வெளியாவதற்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. பல காரணங்களால் படங்கள் தடை பட்டு வருகிறது. நான் மட்டுமில்லை பல நடிகர்கள் இந்த மாதிரி பிரச்சனைக்கு ஆட்பட்டு தான் வருகிறார்கள். 2019ஆம் ஆண்டு என்னுடைய நடிப்பில் 2 படம் வெளியாக வேண்டியதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அந்த படங்கள் 2020 ஆம் ஆண்டு வெளிவரும். இப்ப நான் 83 படத்தில் நடித்து இருக்கிறேன். அந்த படத்தில் நான் ஸ்ரீகாந்த் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. இந்த படத்தில் நிறைய எமோஷனல், ஆக்சன் எல்லாம் சூப்பராக வந்திருக்கு. இந்தியா கொண்டாடும் விதமாக இந்த படம் அமைந்திருக்கிறது என்று கூறினார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “83”. இந்த படம் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதை ஆகும். இந்த படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கைப் பயணத்தையும், அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனதும், 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதும் பற்றிய கதையாகும். இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவித்து உள்ளார்கள். கபில்தேவ் ஆக இந்த படத்தில் ரன்வீர் சிங் நடித்து உள்ளார். ஸ்ரீகாந்த் ஆக ஜீவா, மதன்லாலாக ஹர்டி சாந்து, சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாசின், சுனில் கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் படத்தில் தீபிகா படுகோன், சாகிப் சலீம், ஹார்டி சந்து உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement