விஜய், அஜித் பாடலுக்கு பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கவின் ஆடிய நடனம்.. லீக்கான வீடியோ..

0
7198
kavin
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கவின். நடிகர் கவின் அவர்கள் முதல் முதலில் சின்னத்திரையில் தான் தன்னுடைய நடிப்பை ஆரம்பித்தார்.அதிலும் விஜய் டிவியில் ‘ சரவணன் மீனாட்சி’ தொடரில் ‘வேட்டையன்’ என்ற கதாபத்திரத்தின் மூலம் பெண்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் கவின். இதனை தொடர்ந்து அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.மேலும்,அவர் சீரியலை விட்டு விலகினார். மேலும் ,தமிழ்சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார் . சமீபத்தில் வெளியான ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தில் கதாநாயகியாகநடித்திருந்தார் . இதற்கு பின் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நம்ம கவின் அவர்களுக்கு என்ன பிரச்சனைகள்? வந்தாலும் அவர் மீது பல பேர் பல குறைகள் சொன்னாலும் இவருடைய ரசிகர் கூட்டம் நம்புவதில்லை. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இன்னும் அதிகமாக தான் இவருக்கு ரசிகர்கள் சேர்ந்து உள்ளார்கள். தற்போது கூட கவினுக்கு இளைஞர் ரசிகர்கள் நற்பணி மன்றம் ஒன்றை ஆரம்பித்து உள்ளார்கள்.இதனைத்தொடர்ந்து கவின் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியே வந்துவிட்டார்.இதனால், ரசிகர்கள் ரொம்பவே சோகத்தில் மூழ்கினார்கள் என்று கூட சொல்லலாம். பல பிரபலங்களும் கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையும் பாருங்க : இறுதியில் மோடியிடமே புகார்.. சூரஸம்ஹரத்தை தொடங்கி விட்டாராம் மீரா..

- Advertisement -

அதுமட்டும் இல்லைங்க நட்ப்புக்காக அவரின் அந்த செயல் பாராட்டுக்குரியது என்றும் சமூக வலைத்தளங்களில் கூறியிருந்தார்கள் நெட்டிசன்கள். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சமீபத்தில் விஜய் நிறுவனம் “வி ஆர் தி பாய்ஸ்” அணியை வரவழைத்து சிறப்பாக கொண்டாடினார்கள். இதில் கவினும் தன் நண்பர்களுடன் கலந்து கொண்டு சந்தோஷமாக இருந்தார். இதனைத் தொடர்ந்து கவின் அவர்கள் ஒரு டான்ஸ் ஷோவில் கலந்து உள்ளார். அது மட்டும் இல்லைங்க அந்த டான்ஸ் ஷோவில் செம்மையா நடனமாடியிருக்கிறார்.கவின் தன்னுடைய நடனத்தின் மூலம் அரங்கில் உள்ள அனைவரையும் அதிர வைத்தார் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு கவின் பட்டையை கிளப்பினார்.அதோடு நீண்ட நாட்களுக்கு பிறகு கவினின் நடனத்தை பார்க்க முடிந்தது என்று ரசிகர்கள் கூறி இருந்தார்கள். மேடையில் கவின் ஆடிய நடனம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் மேடையில் தல அஜித், தளபதி விஜய் ஆகியவர்களின் பாடலையும் ஆடினார்.

இதோட தல, தளபதி ரசிகர்களும் கவினுக்கு பாராட்டு தெரிவித்தார்கள். மேலும் ,கவின் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் நடனமாடிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி உள்ளது. தற்போது அவருடைய நடனத்திற்கு ரசிகர்கள் ‘சும்மா அல்லுது இல்ல’என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லைங்க எல்லா ரசிகர்களும் எதிர்பார்க்கிறது கவின், லாஸ்லியா கல்யாணம் தான். அவர்கள் திருமணம் செய்தி எப்ப சொல்லுவாங்கன்னு காத்திருக்கிறார்கள்.இந்நிலையில் கவின் படத்தில் நடிக்கப் போகிறாரா? இல்ல சீரியலுக்கு வரப்போகிறாரா? என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள் ரசிகர்கள். ஏற்கனவே, கவின் மற்றும் லாஸ்லியா ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க போவதாக சில நம்பராமான செய்திகள் வளம் வந்து கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement