இறுதியில் மோடியிடமே புகார்.. சூரஸம்ஹரத்தை தொடங்கி விட்டாராம் மீரா..

0
2707
meera-modi

பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் நிறைவு பெற்றது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு போட்டியாளர்கள் பங்கு பெற்றார்கள் அதில் ஒரு சில போட்டியாளர்கள் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தார்கள். அதிலும் இந்த சீசனில் பங்குபெற்ற மீராமிதுன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே மீராமிதுன் பண மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் பதிவாகி இருந்தன. மேலும், ஜோ மைக்கல் என்பவர் மீரா மிதுன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வந்தார்.

மேலும் ,பிக் பாஸ் வீட்டில் மீராமிதுன் இருந்தபோது பெண் ஒருவர் இவர் மீது பண மோசடி புகாரை காவல்நிலையத்தில் அளித்திருந்தார். இதனை விசாரிக்க காவல்துறையினர் சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று மீராமிதுன் விசாரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும்,, மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளர்களின் வெறுப்பைத்தான் சம்பாதித்தார். அதிலும் ஒரு டாஸ்கின் போது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று மீராமிதுன் கூறியிருந்தார். ஆனால், இந்த விஷயம் விஸ்வரூபமாக எடுக்க, பின்னர் குறும்படம் போட்டு காண்பிக்கப்பட்டது. அதில் மீராமிதுன் சொன்னது போல சேரன் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று நிரூபணம் ஆனது. இதனால் மீராமிதுன் மீது ரசிகர்களுக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : 40 வருடம் முழு சம்பள பாக்கியை காத்திருந்து கொடுத்த தயாரிப்பாளர்.. இப்படி ஒரு மனிதரா..

- Advertisement -

என்னதான் சேரன் மீது எந்தத் தவறும் இல்லை என்று நிரூபணம் ஆனாலும் சேரன், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று தான் மீராமிதுன் தற்போதும் கூறுகிறார். அதுபோக கடந்த சில நாட்களாகவே மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு சர்ச்சையான வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சாக்க்ஷி மற்றும் அபிராமிஜோ மைகளுடன் இணைந்து தனது செல்போன் நம்பரை அவர்களது தனிப்பட்ட குழுக்களில் பகிர்ந்ததாகவும் இதனால் பல்வேறு நபர்களிடம் இருந்து தனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் மீராமிதுன் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ஜோ மைக்கேல் ஏற்கனவே கைதாகி விட்டார் என்றும் விரைவில் அவருக்கு ஆதரவாக இருந்து வரும் அபிராமியும் கைது செய்யப்படுவார் என்றும் மீரா பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-

இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் சேரன் குறித்தும் மீராமிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளினார் என்பதை அவருக்கு ஒத்துக்கொள்ள தைரியம் இல்லை என்றும், அவர் உண்மையான தைரியசாலி என்றால் என்னிடம் தனிப்பட்ட முறையில் நான் செய்தது தவறுதான் என்னை மன்னித்துவிடு மீரா என்று கேட்டிருப்பார். ஆனால், அவர் பிக் பாஸ் வீட்டில் ஒட்டுமொத்தமாக மன்னிப்பு கேட்டுவிட்டு, தான் புனிதமான நபர் என்பதுபோல சேரன் நடித்து வருவதாகவும் கூறியிருந்தார் மீரா. அதேபோல விவகாரம் குறித்து பேசிய மீராமிதுன், சினமயி தான் என்னுடைய விஷயத்தில் தனக்கு மிகவும் ஆதரவாக இருந்து வந்தார் என்றும், வெளிநாடுகளில் இதுபோன்ற புகார்கள் வந்தால் அவர்களை விசாரித்து அது நிரூபிக்கப்பட்டால் அவர்களை உடனே பணியிலிருந்து நீக்கி விடுவார்கள் ஆனால், தமிழ்நாட்டில் தான் ஒரு பெண் குறை சொன்னால் அந்த பெண் மீதே திருப்பி விடுகிறார்கள் என்றும் கூறியிருந்தார் மீரா. இதுபோக மீராமிதுன் பதிவிட்டு வரும் வீடியோக்களை மீடு , மனித உரிமை அமைப்பு, பெண்கள் பாதுகாப்பு என்று பல்வேறு ஹேர் டேக்களை பயன்படுத்தி டேக் செய்து வருகிறார் மீரா மிது.ன்

இந்த நிலையில் மீரா மிதுனுக்கு ருத்ரா என்பவர் எக்மோர் காவல் நிலையத்திலிருந்து கால் செய்ததாகவும் மேலும் அங்கே இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் அந்த பெண் மீராவிற்கு வாய்ஸ் நோட் அனுப்பியதாகவும் மீராமிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தனக்கு ஓராண்டு காலமாக ஞாயம் கிடைக்கவில்லை என்றும் தற்போதும் நான் டார்ச்சர்களை அனுபவித்து வருகிறேன் என்றும் கூறியுள்ள மீராமிதுன் இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் டேக் செய்திருக்கிறார். இப்படி தொடர்ந்து மீராமிதுன் பதிவிட்டு வரும் சர்ச்சையான விஷயங்களால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஸ்ரீரடி போல மீராமிதுன் இணையத்தில் வைரலாக மாறி வருகிறார்

Advertisement