கவின் காதலிப்பதாக சொன்ன நபர் இந்த விஜய் டிவி நடிகை தானா.! ஆதரத்துடன் பதிவிட்ட நெட்டிசன்கள்.!

0
50043
kavin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சில வாரங்களிலேயே பிளே பாய் என்ற பெயர் எடுத்தவர் கவின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையின் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த கவின், சினிமாவில் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். அபிராமி தொடங்கி தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியா வரை தனது மன்மத லீலைகளை அரங்கேற்றி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவுடன் தனியாக பேசிக்கொண்டு இருந்த கவின், கடந்த மூன்று வருடங்களாக நான் சீரியஸான ஒரு சிக்கலான உறவில் இருந்தேன். நாங்கள் இருவரும் ஒரு ஐந்தாறு மாதங்கள் தான் சந்தோசமாக இஇருந்தோம். மற்ற நேரங்களில் சண்டை, பிரிவு, மீண்டும் சமாதானம் ஆவது என்று தான் இருந்தது.

இதையும் பாருங்க : விஷால் திருமணம் நடக்குமா நடக்காத.! புகைப்படத்தை பதிவிட்டு உறுதி செய்த காதலி.! 

- Advertisement -

நான் பிக்பாஸ் வரும் முன்பு என்னை அவர் ஒதுக்கிவிட்டார். பிக்பாஸ் போகிறேன் என சொன்னதற்கு அப்படியே போய்விடு, எதுவுமே இல்லை என கூறிவிட்டார். என் நம்பரையும் பிளாக் செய்துவிட்டார் என்று கூறியிருந்தார். இதனால் கவின் கூறிய அந்த பெண் யார் என்று ரசிகர்கள் குழம்பி வந்தனர்.

இந்த நிலையில் அந்த நபர் பிரியா பவானி ஷங்கர் என்று ஒரு புதிய புரளி ஒன்று கிளம்பியுள்ளது. பிரியா பவானி ஷங்கரும் கவினும் விஜய் தொலைக்காட்சியில் ஒன்றாக வேலை செய்த்தவர்கள் எனவே கவின் குறிப்பிட்ட அந்த நபர் பிரியா பவானி ஷங்கர் தான் என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

அது போக கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் கவின் மற்றும் பிரியா பவானி ஷங்கர் உரையாடிய ஒரு ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், பிரியா பவானி ஷங்கர் ஏற்கனவே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் அதனை அவரே குறிப்பிட்டும் இருக்கிறார் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

Advertisement