பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முன் கவின் பேசிய நெகிழ்ச்சியான பேச்சு இது தான்.!

0
4320
kavin
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.இன்னும் 10 நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிந்துவிடும். மேலும், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் நடந்த அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்கி கோல்டன் டிக்கெட்டை முகின் அவர்கள் வென்றார். மேலும், அவரை பிக்பாஸின் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் 6 போட்டியாளர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டிலுள்ள சாண்டி, தர்ஷன், கவின், லாஸ்லியா,ஷெரின் ஆகிய ஐந்து பேரில் ஒருவர் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட உள்ளது என பிக் பாஸ் குழு தெரிவித்தார்கள்.

-விளம்பரம்-
kavin

இதற்கு அடுத்தகட்டமாக பிக் பாஸ் குழு நேற்று ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்தார்கள். அது பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்றே வெளியேறும் நபருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிக்பாஸ் குழு அறிவித்தது. திடீரென்று கவின் நான் வெளியே செல்கிறேன் என்று முடிவு செய்தார்.நேற்று கவின் வீட்டை விட்டு வெளியே சென்றார? இல்லையா? என்ற பல சந்தேகங்களுடன் மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலும், இன்று வெளியிடப்பட்ட ப்ரோமோ வில் கவின் அவர்கள் வெளியே போனா காட்சி வெளியிட்டார்கள் . மேலும், கவின் அவர்கள் 5 லட்சம் ரூபாய்க்கு மட்டும் வெளியே போகவில்லை. அவர் எப்பவுமே இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தன்னுடைய நண்பர்களுக்கு ஆதரவாகவும்,போட்டிகளில் விட்டுக் கொடுத்தும் உள்ளார்.

இதையும் பாருங்க : 10 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய கமலஹாசன்.! இது என்ன பிக் பாஸ் ஆண்டவருக்கு நேர்ந்த சோதனை.!

- Advertisement -

இந்த நிலையில் மற்றவர்களிடம் இதற்காக நிறைய பேசியும் உள்ளார்.அது அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டதை தொடர்ந்து கமல்ஹாசன் அவர்கள் கவினுக்கு அறிவுரையும் கூறினார். இதை நிரூபிக்கும் வகையில் கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் பிரோம் கவின் வெளியேறும் காட்சி வந்தவுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதுமட்டுமில்லாமல், கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் தன்னுடைய நண்பர்களிடம் மனம் திறந்து பேசினார். அவருடைய பேச்சு அனைவரின் மனதையும் நெகிழ வைக்கும் அளவிற்கு இருந்தது.

kavin

இவருடைய பேச்சால் இதுவரை கவினை வெறுத்த ஒரு சில பேர் கூட அவருக்கு ‘ சல்யூட் அடிக்கும்’ வகையில் அவருடைய பேச்சு இருந்தது என்று கூறினார்கள். மேலும், நண்பர்கள் வெற்றிபெற நான் விட்டுக் கொடுக்கவும் தயார் என்று அவர் பேச்சளவில் கூறிய பேச்சை தற்போது செயலிலும் காட்டி விட்டார் என்றும் கூறி வருகிறார். உண்மையிலேயே நட்புக்கு இலக்கணமாய் ஒரு சிறந்த நண்பன் என்று சொல்லுமளவிற்கு அவருடைய செயல் இருந்தது. “நண்பேண்டா” என்று பெருமையாகச் சொல்லும் அளவிற்கு கவினுடைய செயல் இருந்தது என்று கவினை பாராட்டி சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். காதலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்று தெரியவில்லை ஆனால், நட்பில் சிறந்தவனாக திகழ்கிறார் கவின் என்று கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement