சிவகார்த்திகேயனின் டாக்டர் படபிடிப்பில் கவின். ரசிகர்களை குஷியாக்கும் புகைப்படம் இதோ.

0
2387
kavinsivakarthikeyan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. சொல்லப்போனால் இந்த சீசனுக்கு முன்னாள் ஒளிபரப்பான இரண்டு சீசன்களை விட இந்த சீசன் தான் மிகவும் ஹிட் அடைந்தது. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் அந்த வகையில் கவினும் ஒருவர். கவின் அவர்கள் படிக்கும் போதே ஆர்.ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார்.

-விளம்பரம்-

சினிமா துறையில் மீது இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் உதவியால் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மேலும், நடிப்பைக் கற்றுக் கொள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். ” கனா காணும் காலங்கள்” என்ற சீரியல் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு பின் பிரபலமான சீரியல் ஆன சரவணன் மீனாட்சி சீரியலில் ‘வேட்டையன்’ என்கிற சரவண பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பையுயும், அன்பையும் பெற்றார்.

- Advertisement -

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு 2015 ஆம் ஆண்டு ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கு எந்த அளவிற்கு பிரபலம் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. இருப்பினும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கவின் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது.

Image

-விளம்பரம்-

அதற்கு ஏற்றார் போல கவின் மற்றும் சிவகார்த்திகேயன் சந்தித்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வைரலானது. மேலும், சமீபத்தில் டாக்டர் படபிடிப்பில் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது கவினும் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில் டாக்டர் படபிடிப்பில் இருந்து சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில், சிவகார்த்திகேயனுடன் நடிகர் வினய் மற்றும் கவினும் இருக்கிறார்.

Advertisement