‘என்ன இது Annabelle பொம்ம மாதிரி’ – லாஸ்லியவின் கிறிஸ்துமஸ் போட்டோ ஷூட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
877
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ புது முகங்களுக்கு தமிழ் சினிமாவில் பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு பரிச்சயமில்லாத முகங்கள் கலந்து கொண்டார்கள். இதில் தர்ஷன் முகேன், லாஸ்லியா போன்ற பலரும் ரசிகர்களுக்கு புதுமுகமாக தான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மூவருக்குமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது.

-விளம்பரம்-

செய்தி வாசிப்பாளர் To பிக் பாஸ் :

அதிலும் குறிப்பாக லாஸ்லியாவின் புகழ் கொடிகட்டி பறந்து வருகின்றது. இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது சொல்லப்போனால் இதே சீசனில் பங்கேற்ற முகேன் மற்றும் தர்ஷனை விட லாஸ்லியா தான் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

- Advertisement -

குவியும் பட வாய்ப்புகள் :

அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார். அவர் சொன்னதை போலவே பிக் பாஸ்க்கு பின்னர் முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கமிட் ஆகி இருந்தார்.

தோல்வியடைந்த முதல் படம் :

ஆனால், அரியுடனானபடத்திற்கு முன்பாகவே ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது லாஸ்லியாவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் தோல்விப் படமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படத்தில் நடித்து வருகிறார் லாஸ்லியா.

-விளம்பரம்-

லாஸ்லியாவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் :

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு Santa போல சிவப்பு கவுன் அணிந்து, மண்டை மீது இரண்டு கொண்டையை போட்டுகொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.

கமன்ட் பகுதியை முடக்கிய லாஸ்லியா :

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் கேலி செய்து பல்வேறு விதமான கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். இதனால் அடுத்து அடுத்து பதிவிட்ட புகைப்படங்களில் கமெண்ட் பகுதியை முடக்கி விட்டார்கள் லாஸ்லியா. தற்போது இவர் தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

Advertisement