முதன் முறையாக லாஸ்லியா நடத்திய போட்டோ ஷூட். வைரலாகும் புகைப்படங்கள்.

0
55812
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் லாஸ்லியா மிகவும் முக்கியமான நபர் ஆவார். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, தனது நண்பர் ஒருவர் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார்.

-விளம்பரம்-

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த ஒரே நாளில் இவருக்கு சமூக வலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கல் கூட உருவானது இதற்கு முக்கிய காரணமே இவரது க்யூட்டான தோற்றம் என்றே கூறலாம். ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் பட்டாம்பூச்சி போல சுற்றித்திரிந்த லாஸ்லியா பின்னர் கவின் மீது காதல் வயப்பட்டார். சொல்லப்போனால் இந்த பிக்பாஸ் சீசன் முழுக்க கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதைதான் ஓடிக்கொண்டு இருந்தது.

இதையும் பாருங்க : கடற்கரையில் ஜிகுஜிகு கிளாமர் ஆடை. புத்தாண்டு கொண்டாடட்ட புகைப்படங்களை பதிவிட்ட நயன்.

- Advertisement -

இவர்கள் இருவருக்கும் சமூகவலைதளத்தில் எக்கச்சக்க ஆர்மி கூட உருவானது. இதனால்தான் லாஸ்லியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதற்கு ஒரு முக்கிய காரணமாகாவும் பார்க்கப்படுகிறது. லாஸ்லியா விஷயத்தில் அவரது தந்தை கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொண்டார். இருப்பினும் இறுதிவரை கவின் உடனான உறவை துண்டிக்காமல் இருந்து வந்தார் லாஸ்லியா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர்கள் இருவரும் இதுவரை ஏன் சந்திக்கவில்லை என்று ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

சமீபத்தில் தான் லாஸ்லியா இலங்கையில் இருந்து லாஸ்லியா வந்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில்வெளியிட்டிருந்தார் லாஸ்லியா. இதனால் லாஸ்லியாவின் #Kollywoodawaitslosliya என்ற ஹேஷ் டேக் ஒன்று சமீபத்தில் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்தது. லாஸ்லியாவை விரைவில் தமிழ் சினிமாவில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு ஹேஷ் டேக்கை உருவாக்கியுள்ளனர். மேலும், லாஸ்லியா கடந்த சில காலமாக சென்னையில் தான் வசித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் லாஸ்லியா முதன் முறையாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது பல்வேறு லைக்ஸ்களை குவித்து வருகிறது . லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது இயக்குனர் கே எஸ் ரவி குமார் லாஸ் லியாவிடம் பேசிய போது திரை உலகம் உங்களை வரவேற்க காத்து கொண்டு இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும், லாஸ்லியா ராஜா ராணி சீசன் 2 வில் நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement