இரவில் கவின் தூங்கிய பின்னர் லாஸ்லியா கவினுக்கு கொடுத்த ரகசிய பொருள்.! என்ன தெரியுமா.?

0
14860
losliya
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்துள்ளது. கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

லாஸ்லியாவின் பெற்றோர்கள் உள்ளே சென்றுவிட்டு வந்த பின்னர் சிறுது நாட்கள் கவின், லாஸ்லியா பக்கம் தலை வைக்காமல் இருந்தார். ஆனால், அது சிறிது நாட்கள் கூட நீடிக்கவில்லை. கடந்த சில நாட்களாக கவின் மற்றும் லாஸ்லியா மீண்டும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். முன்பை போலவே இருவரும் அடிக்கடி தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : நோட்டீஸ் அனுப்பிய கல்வி துறை.! பிகில் இசை வெளியீட்டு விழாவால் புதிய சிக்கலில் சிக்கிய கல்லூரி.!

- Advertisement -

கடந்த வாரம் நடைபெற்ற பினாலே டாஸ்க்கின் போது கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து வந்தனர். மேலும், லாஸ்லியாவை கீழே தள்ளி விட்டதால் கவின், இதுநாள் வரை உயிராக இருந்த சாண்டியிடமே சண்டையிட்டார். இதனால் கவின் மேலிருந்த பாசம் லாஸ்லியாவிற்கு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அனைவரும் தூங்கிய பின்னர் லாஸ்லியா லிவிங் ஏரியாவில் அமர்ந்து கொண்டு ஏதோ ஒரு புகைப்படத்தில் எதையோ எழுதி கொண்டு இருந்தார். அதன் பின்னர் கவின் தூங்கி கொண்டு இருந்த கட்டில் அருகில் யாருக்கும் தெரியாமல் அமைதியாக சென்று அந்த பொருளை கவின் படுக்கை பக்கத்தில் வைத்துவிட்டு வந்தார். இந்த காட்சிகளை பார்க்கும் போது லாஸ்லியா, கவினின் புகைப்படத்தில் தான் ஏதோ ஒன்றை எழுதி கவினுக்கு கொடுத்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement