நோட்டீஸ் அனுப்பிய கல்வி துறை.! பிகில் இசை வெளியீட்டு விழாவால் புதிய சிக்கலில் சிக்கிய கல்லூரி.!

0
1680
vijay
- Advertisement -

நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு விழா தனியார் கல்லூரியில் மீரல வைக்கும் அளவிற்கு நடந்து முடிந்தது. இந்த இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் பேசிய வார்த்தைகள் அதிமுகவுக்கு எதிராக விமர்சனங்கள் செய்தது போல இருந்தது.மேலும்,பிகில் போஸ்டரில் இறைச்சி வெட்டும் முட்டி (கட்டை) மீது செருப்புக் கால் வைத்து விஜய் அவர்கள் அமர்ந்து இருக்கிறார்.அதை இறைச்சி வியாபாரிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image result for Bigil audio launch

மேலும், விஜய் பிகில் பட போஸ்டர் இறைச்சி கடைக்காரர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று கறிகடை உரிமையாளர் கோபால் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியது, இந்தியாவில் உள்ள அனைத்து இறைச்சி கடை வியாபாரிகள் அனைவரும் காலையில் கடை திறந்த பின் தெய்வமாக நினைத்து வணங்குவது நாங்கள் தொழில் செய்யும் முட்டி, கத்தி தான். ஆனால், விஜய் அவர்கள் அதன் மீது செருப்பு கால் வைத்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியிடுவது மொத்த வியாபாரிகளையும் செருப்பால் அடித்தது போல் எங்களுக்கு உணர்வை ஏற்படுத்துகிறது என்று கூறியிருந்தார்கள்.

இதையும் பாருங்க : புதுப்பொலிவுடன் மாறியுள்ள பிக் பாஸ் வீடு.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

- Advertisement -

அதே போல இந்த இசை வெளியீட்டு விழாவில் டிக்கெட் வாங்கிய பல ரசிகர்கள் அனுமதிக்க படவில்லை என்று ரசிகர்கள் சிலர் டிக்கெட்களை கிழித்து போட்டு தங்களது வருத்தங்களை தெரிவித்தனர். அந்த விடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இது போன்று பல்வேறு சர்ச்சைகளை பிகில் இசை வெளியீட்டு விழா சந்தித்துள்ள நிலையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றிலும் சிக்கியுள்ளது.

Image result for Bigil audio launch

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிலையில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது என்று உயர்கல்வித்துறை செயலாளர் சார்பாக கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பியயுள்ளது. இதனால் கல்லூரி நிர்வாகம் சிக்கலை சந்தித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement