உன் படம் கண்டிப்பா அட்டர் பிளாப் தான் – கேலி செய்த ரசிகர்களுக்கு லாஸ்லியா பதிலடி.

0
14278
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ புது முகங்களுக்கு தமிழ் சினிமாவில் பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு பரிச்சயமில்லாத முகங்கள் கலந்து கொண்டார்கள். இதில் தர்ஷன் முகேன், லாஸ்லியா போன்ற பலரும் ரசிகர்களுக்கு புதுமுகமாக தான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மூவருக்குமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CEgF3X1JW18/

அதிலும் குறிப்பாக லாஸ்லியாவின் புகழ் கொடிகட்டி பறந்து வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்குபெற்ற முகேன் மற்றும் தரிசனை விட லாஸ்லியா தான் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் என்று அடுத்தடுத்து வெளியாக இருந்தது.

- Advertisement -

இந்த இரண்டு படங்களும் வெளிவராத நிலையில் தற்போது லாஸ்லியா அடுத்த படத்தில் கமிட்டாகியிருக்கிறார். லாஸ்லியா கதாநாயகியாக கமிட் ஆகியுள்ள இந்த படத்தினை Axess film factory என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக புதுமுக நடிகர் பூரானேஷ் என்பவர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெ எம் ராஜா சரவணன் என்பவர் இயக்க இருக்கிறார். இவரும் புது முக இயக்குனர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியா சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

லாஸ்லியாவின் இந்த பதிவை கண்ட பலரும் லாஸ்லியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். ஆனால் வழக்கம்போல இந்த பதிவும் ரசிகர்களின் கேலிக்கு உள்ளானது. அதில் ரசிகர் ஒருவர் கண்டிப்பாக அட்டர் பிளாப் தான் ஆகும் என்று கூறியதற்க்கு வாய்ப்பு இல்ல ராஜா என்று பதில் கூறி இருக்கிறார் லாஸ்லியா. அதேபோல ஒரு படமாவது வெளியே வரட்டும் என்று மற்றொரு ரசிகர்கள் செய்ததற்கு, ஆம் கொரோனா பிரச்சனை முடிந்ததும் அனைத்து படங்களும் வெளியாகும் என்று கூறியிருக்கிறார் லாஸ்லியா. இப்படி தன்னை கேலி செய்யும் அனைவருக்கும் தனித்தனியாக பதில் கொடுத்திருக்கிறார் லாஸ்லியா.

-விளம்பரம்-

Advertisement