எங்களுக்கு உங்கள பிடிக்கும். ப்ளீஸ் இப்படில ட்ரெஸ் போடாதீங்க – புலம்பிய லாஸ்லியா ரசிகர்கள்.

0
2369
losliya

பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ நபர்களுக்கு சினிமாவில் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. முதல் சீசன் துவங்கி மூன்றாவது சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற எத்தனையோ நபர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா தற்போது தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.

கவினுக்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில்அதிக ரசிகர்களை பெற்றது லாஸ்லியா தான். லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே போட்டியாளர்களிடம் போன் செய்து இருந்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், லாஸ்லியா வெளியே வந்ததும் அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறி இருந்தார். அவர் சொன்ன வாய் முகூர்த்தமோ என்னவோ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த சில நாட்களிலேயே லாஸ்லியாவுக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

நெடுஞ்சாலை ஆதி நடிக்கும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ள லாஸ்லியா, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் பிரிஎண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதேபோல இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஒரு சிறிய டீசர் கூட வெளியாகி இருந்தது. அதில் அர்ஜுன் சிங் மற்றும் அர்ஜுனனைவிட லாஸ்லியாவை தான் ரசிகர்கள் அதிகம் பார்த்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த லாஸ்லியா அடிக்கடி பல போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார். இந்தநிலையில் சமீபத்தில் இவர் கொஞ்சம் கிளாமரான ஆடையை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வந்தாலும் ஒரு சில ரசிகர்களோ நீங்கள் இது போன்ற எல்லாம் ஆடையை அணியாதீர்கள் என்று கொஞ்சம் அப்செட்டில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement