கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை.! லாஸ்லியா வாழ்வில் நடந்த மிகப்பெரிய சோகம்.!

0
3240
Losliya
- Advertisement -

ஆரம்பித்த முத்த இரண்டு நாள் கலகலப்பாக போய் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் பின்னர் சோகமும் கண்ணீருமாக போய் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மேடையில் நின்று தங்களது வாழ்வில் நடந்த சோகங்களை பகிர்ந்து வந்தனர்.

-விளம்பரம்-

இதுவரை மோகன் வைத்யா,ரேஷ்மா, தர்ஷன், கவின் என்று அனைவரும் சொன்ன கதைகள் பார்வையாளர்களை கண்ணீர் கடலில்ஆழ்த்தியது .நேற்று
(ஜூன் 29) ஒளிபரப்பான நிகழ்ச்சியிலும் இதே டாஸ்க் தொடர்ந்தது அப்போது பல இளசுகளின் கிரஷ் லாஸ்லியா தனது வாழ்வில் நடந்த சோக கதையை கேட்டு அனைவருமே கண்ணீர் விட்டு அழுதனர்.

இதையும் பாருங்க : நீ என் பிறந்தநாளை சிறப்பாக்கிவிட்டாய்.! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.! 

- Advertisement -

நேற்று தனது வாழ்வில் நடந்த மிகப்பெரிய சரிவு குறித்து பேசிய லாஸ்லியா, எனக்கு இரண்டு தங்கை மாற்று ஒரு அக்கா இருந்தாங்க அவருக்கு அதிக கோபம் வரும் அதே போல அவருக்கு தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்று அவளுக்கு ஒரு தாழ்வு மனப்பானை. ஒரு முறை அம்மாவிடம் கொஞ்சம் சண்டை அதனால் அவள் இரண்டு நாள் பேசவே இல்லை. அன்று இரவு என் அம்மா தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது நான் மிகவும் சின்னப்பொண்ணு, ஒரு நாள் அக்கா கோபத்துல தங்கச்சிங்கள அடிச்சிட்டு அந்த கோபத்துல அம்மா அவளை கத்திட்டாங்க. அதுனால நான் அக்காவா சமாதானம் செய்ய அக்கா ரூம்க்கு போனேன். எங்க வீட்ல அந்த ஒரு ரூம்ல மட்டும் தான் கதவு இருந்தது. நான் போய் அந்த கதவுக்கு கீழ குனிஞ்சி பார்த்தேன்.

-விளம்பரம்-

அங்கே தங்கிச்சியோடு தொட்டிலுக்கு மேல எங்க அக்கா நின்றுகொன்டு என்னோட அக்கா தனது கழுத்தில் துணிய சுத்திகொண்டு நிற்கிறாள். எனக்கு சின்ன பொண்ணு என்பதால் அவளுக்கு நடந்தது எனக்கு புரியவில்லை நான் அவள் கன்னத்தில் தட்டி எழு அக்கா சொன்னேன். அதன் பின்னர் தான் அவர் இறந்ததே எனக்கு தெரியும்.

அதன் பின்னர் இறுதியாக பேசும் லாஸ்லியா, எனக்கு இந்த கதை சொல்ல விருப்பமில்லை, இருப்பினும் லவ் பிரேக் அப்போ, வீட்டில் பிரச்சனையோ,சின்ன தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் போன பிறகு உங்கள சுத்தி எவ்வளவு கஷ்டப்படுவாங்கனு யோசிங்க, உங்க அப்பா அம்மா எவ்வளவு கஷ்டபடுவாங்கனு யோசிங்க என்று கண்ணீருடன் அட்வைஸ் செய்தார்.

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா பேசவே மாட்டீங்கிறார் என்று சொன்ன அனைவரும் லாஸ்லியாவின் இந்த சோக கதை கேட்டு உருகியுள்ளனர். அதிலும் தற்கொலை குறித்து இந்த வயதில் லாஸ்லியா சொன்ன அறிவுரை அனைவரையும் கொஞ்சம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement