விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ புது முகங்களுக்கு தமிழ் சினிமாவில் பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு பரிச்சயமில்லாத முகங்கள் கலந்து கொண்டார்கள். இதில் தர்ஷன் முகேன், லாஸ்லியா போன்ற பலரும் ரசிகர்களுக்கு புதுமுகமாக தான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மூவருக்குமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது.
அதிலும் குறிப்பாக லாஸ்லியாவின் புகழ் கொடிகட்டி பறந்து வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்குபெற்ற முகேன் மற்றும் தரிசனை விட லாஸ்லியா தான் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார்.
இதையும் பாருங்க : சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணமா இது – இவருக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா ?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் என்று அடுத்தடுத்து வெளியாக இருந்தது. லாஸ்லியா நடிக்கும் படத்தில் அர்ஜுன், ஹர்பஜன், சதீஷ் மட்டுமல்ல குக்கு வித் கோமாளி பிரபலம் பாலாவும் நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் நடித்து இருந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது.
இப்படி ஒரு நிலையில் இந்த படம் இன்று (செப்டம்பர் 17) வெளியாகி இருக்கிறது. தனது நடிப்பில் முதன் முறையாக வெளியாகியுள்ள படத்தை காண லாஸ்லியா திரையரங்கிற்கு வந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் லாஸ்லியா நடிகையாக நடித்துள்ள முதல் படம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.