பாராட்டினால் சிரிப்பது கலாய்த்தால் முறைப்பது தான் லாஸ்லியா லாஜிக்.! இதை பாருங்க புரியும்.!

0
3427
Losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே இளசுகளின் பேவரைட் என்று ஒருவர் இருக்கத்தான் செய்கின்றனர். முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா என்று இளம் பெண் போட்டியாளர்கள் தான் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தனர். அதே போல இந்த சீஸனின் ஆரம்பத்தில் லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

ஆனால், கடந்த சில நாட்களாக இவரது பெயரை இவரே டேமேஜ் செய்து கொண்டு வருகிறார். வடிவேலு பற்றி நக்கலாக நினைத்தது, ஜெயில் டாஸ்கில் ஓவராக செய்தது,சாக்க்ஷி விஷயத்தில் இரட்டை வேடம் போட்டது என்று இப்படி எத்தனையோ காரணத்தால் ரசிகர்கள் சிலர் இவரை வெறுத்து ஒதுக்கி வருகின்றனர்.

இதையும் பாருங்க : கைதட்டிய ரஜினி ரசிகர்கள்.! கோமாளிகளா என்று ரஜினி முன்பே திட்டிய சிவக்குமார்.! 

- Advertisement -

இந்த நிலையில் வனிதா ரீ-என்ட்ரி கொடுத்த போது அபியிடம், லாஸ்லியா ஆண்களிடம் பழகி சேப் கேம் விளையாடுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஏற்றார் போல கடந்த சில நாட்களாக ஆண்களிடம் மட்டுமே நட்பு பாராட்டி வருகிறார் லாஸ்லியா. மேலும், நேற்றய நிகழ்ச்சியில் வனிதா லாஸ்லியா குறித்து பேசுகையில், அது எனக்கு தெரியும் நான் வெளியே போய் பாத்துக்கிறேன் என்று நோஸ் கட் செய்தார் லாஸ்லியா.

இதனால் கடுப்பான வனிதா, சேரினிடம் ‘அவளுக்கு என்ன அப்படி ஒரு திமிரு, மற்றவர்கள் எதாவது அவளைபற்றி சொன்னால் அவள் உடனே ரியாக்ட் ஆகிறாள். அவள் ஒரு பசுத்தோல் போற்றிய புலி, அவளுக்குள் அவ்வளவு இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

வனிதா கூறியதை மெய்யாக்கும் விதமாக தற்போது ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கஸ்தூரி ஏதோ கிண்டலாக லாஸ்லியாவை கூற உங்கள் கமன்ட் எனக்கு தேவை இல்லை என்று திமிராக பேசுகிறார் லாஸ்லியா. இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது லாஸ்லியா, தன்னை பாராட்டினால் ஜாலியாக எடுத்துக்கொள்கிறார். ஆனால், கலாய்த்தால் அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement