கவின் சட்டையை அணிந்து கொண்ட லாஸ்லியா.! இவ்ளோ க்ளோஸ் ஆகிட்டாங்க இதை கவனிசீங்களா.!

0
11012
kavin losliya

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரமாக ரணகளமாக சென்றாலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸுக்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லலை என்று ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.

தற்போது லாஸ்லியாவும் கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். கவின் மற்றும் லாஸ்லியா இரவு நேரத்தில் தனியாக பேசுவதை சாண்டி கூட கண்டித்தார். ஆனால், இவர்கள் இருவரும் யார் பேச்சையும் கேப்பதாகவும் இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

இதையும் பாருங்க : நல்லா இருந்த தர்ஷன் – ஷெரினிடையே நாரதர் வேலையை பார்க்கத் துவங்கிய வனிதா.! 

- Advertisement -

கவின் எங்கு செல்கிறாரோ அங்கே தான் லாஸ்லியாவும் இருக்கிறார். அதே போல பகல் முழுவதும் ஒன்றாகவே இருக்கும் இவர்கள் இரவானால் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால், இதனை மற்றவர்கள் கேட்டால் சும்மா பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று கூறிவிடுகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் லாஸ்லியா கவின் எப்போதும் அணியும் சிகப்பு நிற சட்டை ஒன்றை லாஸ்லியா அணிந்திருந்தார். இதனை தெளிவாக கண்டு பிடித்த நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது கவின் – லாஸ்லியா இந்த அளவிற்கு க்ளோஸ் ஆகிவிட்டனரா என்று வியந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement