நல்லா இருந்த தர்ஷன் – ஷெரினிடையே நாரதர் வேலையை பார்க்கத் துவங்கிய வனிதா.!

0
2344
Vanitha

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் எலிமினேஷன் ஆன வனிதா கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால், அவர் வந்த ஒரு வாரத்தில் அவரை மீண்டும் போட்டியாளராக அறிவித்துவிட்டது பிக்பாஸ். இதனால் போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் மீண்டும் உள்ளே சென்ற வனிதாவால் பல்வேறு சண்டைகள் வெடித்தன. ஆரம்பத்தில் முகேன் மற்றும் அபிராமிக்கு இடையே கலகம் மூட்டி சண்டையை ஏற்படுத்தினார் வனிதா. இந்த நிலையில் இன்று ஷெரின் மற்றும் தர்ஷன் இடையே நடந்த ஒரு சிறு பிரச்சனையை ஊதி பெரிதாக்க முயற்சி செய்தார் வனிதா.

இதையும் பாருங்க : இந்த வாரம் வெளியேற போவது யார்.! சீக்ரெட் ரூம் இருக்கா இல்லையா.! அப்டேட்.!

இன்றைய நிகழ்ச்சியில் ஷெரின் மற்றும் தர்ஷன் இருவரும் படுக்கை அறையில் போர்வைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது இருவரும் சிறிதாக சண்டை போட்டுக்கொண்டன.ர் தர்ஷன் , ஷெரினிடம் நீ சமையல் டீம் தானே எதற்காக இங்கு வந்து வேலை செய்கிறாய் என்று விளையாட்டாக கூற அதனை சீரியசாக எடுத்துக் கொண்ட ஷெரின் நீ பேசாதே என்று கூறினார். அதற்கு தர்ஷனும் நீ பேசாதே என்று கூறிவிட்டார். இவர்கள் இருவரின் பார்க்கும்போது ஏதோ செல்லமாக சண்டை போடுகிறார்கள் என்பது போலத்தான் தெரிந்தது.

ஆனால் தர்ஷன் பேசியதை கொஞ்சம் சீரியசாக எடுத்துக் கொண்டு அதனை சேரனிடம் சென்று புலம்பினார். சேரனும் தர்ஷன் எப்போதும் அப்படித்தான் பேசுவான் அவனுடைய குரல் வளம் அப்படித்தான் என்று சமாதானம் செய்வது போல பேசினார். ஆனால், வனிதாவிடம் தனியாக பேசிக் கொண்டிருந்த ஷெரினிடம், இங்கே எதற்காக வந்தாய், அவன் எப்போதும் அப்படி தான் பேசுகிறான். அவனிடம் நீ தள்ளி இரு உன் மரியாதையை காப்பாற்றிக்கோல். உன்னுடைய குறிக்கோள் என்ன அதை மட்டும் பார்த்துக்கொள் என்று ஏதேதோ சொல்லி உசுப்பேத்தி விட்டார் வனிதா. இதனால் சரின் தர்ஷனை நினைத்து அழத் தொடங்கிவிட்டார். இதை வைத்து பார்க்கும்போது ஷெரின் மற்றும் தர்ஷன் இடையில் சண்டை ஏற்பட வாய்ப்பும் இருக்கிறது.