பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல இளசுகளின் பேவரைட் போட்டியாளராக இருந்து வருபவர் லாஸ்லியா மட்டும் தான். ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் இவர் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார் லாஸ்லியா. லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.
லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே, லாஸ்லியாவின் பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.
இதையும் பாருங்க : கன்னட நடிகர்களிடம் இருந்து என்னை காப்பற்றுங்கள்.! கதறும் பிரெண்ட்ஸ் பட நடிகை.!
அதே போல இவரது ஆர்மிகளும் இவரது அப்டேட்டுகளை தவறாமல் வெளியிட்டு வருகின்றனர். மேலும், லாஸ்லியாவின் வீடியோகளை மட்டும் கட் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டும் வருகின்றனர். சமீபத்தில் லாஸ்லியா தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் தனது பேசிய லாஸ்லியா, தனது அப்பாவை பார்த்து 10 வருடங்கள் ஆகிறது என்றும், அவரை தான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்றும் கூறியிருந்தார். அப்படி இருக்க இந்த புகைப்படத்தை பார்த்தல் 10 வருடத்திற்கு முன்னாள் எடுத்தது போல தெரியவே இல்லையே.
இருப்பினும் இந்த புகைப்படத்தில் இருப்பது லாஸ்லியாவின் தந்தை இல்லை என்றும் , இவரது பெயர் காண்டீபன் என்றும், இலங்கையின் பிரபல தொலைக்காட்சி மற்றும் வானொலி வர்ணனையாளராக பணியாற்றி இவர், லாஸ்லியா பணிபுரிந்து அதே இடத்தில்தான்பணிபுரிந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.