மதுமிதா நாயே – மனைவியை திட்டி தீர்த்து மதுமிதா கணவர் செய்த ட்வீட்டால் ஷாக்கான ரசிகர்கள்.

0
148465
madu
- Advertisement -

சொந்த மனைவியே நாயே என்று திட்டி ட்வீட் போட்ட மதுமிதாவின் கணவரின் பதிவால் ரசிகர்கள் ஷாக்கடைந்து உள்ளனர். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பெண் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மதுமிதா. இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக ஜாங்கிரி என்று தான் அழைப்பார்கள். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

நடிகை மதுமிதா கடந்த 2019 ஆம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் தான் நடிகை மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார். மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே மதுமிதாவின் கணவர் ட்விட்டரில் போட்டியாளர்களை பற்றி விமர்சித்து தொடர்ந்து ட்வீட் செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று மதுமிதா கணவரின் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து சில சர்ச்சையான ட்வீட்கள் பதிவாகி இருந்ததை கண்டு பலரும் ஷாக் அடைந்தனர்.

அதிலும் அவரது மனைவி குறித்தே சில பதவிகள் பதிவிடபட்டிருந்தது. அதிலும் நாயே மதுமிதா, எனக்கு தோன்றிய கவிதை நாயே மதுமிதா நாயே என்றெல்லாம் பதிவிட்டு இருப்பதை பார்த்து பலரும் ஷாக்கடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து மீண்டும் விளக்கமளித்துள்ள மதுமிதாவின் கணவர், தன்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement