விஸ்வாசம் படத்தில் அஜித் ஒட்டிய அதே மாடல் பைக்கை ஓட்டி அசத்திய மதுமிதா – வீடியோ இதோ.

0
8980
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பெண் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மதுமிதா. இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக ஜாங்கிரி என்று தான் அழைப்பார்கள். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இதையும் பாருங்க : அந்த நூலுக்கு பிரச்சனைனு போது இந்த நூல் குரல் குடுத்துச்சி – கமல் குறித்து மீரா மிதுன் சர்ச்சை.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் மதுமிதா பைக் ஓட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள அவர், படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன். எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். நடிகை மதுமிதா அஜித்துடன் விசுவாசம் படத்தில் நடித்திருந்தார். விஸ்வாசம் படத்தில் அஜித் பல்சர் பைக்கை ஓட்டுவர்,தற்போது மதுமிதாவுக்கு அதே பல்சர் பைக்கை தான் ஒட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement